Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA Test: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

India vs South Africa Test Series: இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக பவுமா தொடரில் இருந்து விலகினார்.

IND vs SA Test: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்கா அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Oct 2025 16:47 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அதே உற்சாகத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், இந்திய அணி 3 போட்டிகள் (IND vs AUS) கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி வரவிருக்கும் டி20 தொடரை வென்று ஒருநாள் தொடர் தோல்விக்குப் பழிவாங்க முயற்சிக்கும். இதற்கிடையில், இந்தியா சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் விளையாடும். அதன்படி, இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெம்பா பவுமா மீண்டும் கேப்டன்:

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக பவுமா தொடரில் இருந்து விலகினார். பவுமா இல்லாத நிலையில், ஐடன் மார்க்ராம் அணியை கேப்டனாக வழிநடத்தினார். தற்போது முழு உடற்தகுதிக்கு திரும்பியுள்ள டெம்பா பவுமா, இந்திய அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவுக்கு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி எப்போது..? A டூ Z விவரங்கள் இதோ..!

இந்திய அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:


டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரன், டெவல்ட் ப்ரீவிஸ், ஜுபைர் ஹம்சா, டோனி டி ஜோர்ஜி, கார்பின் போஷ், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், செனுரன் முத்துசாமி, காசிசோ ஹர்படா, கா சைமன் ரபடா.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அட்டவணை

டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட்: 2025 நவம்பர் 14, கொல்கத்தா
  • 2வது டெஸ்ட்: 2025 நவம்பர் 22, குவஹாத்தி

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி: 2025 நவம்பர் 30, ராஞ்சி
  • 2வது ஒருநாள் போட்டி: 2025 டிசம்பர் 3, ராய்ப்பூர்
  • 3வது ஒருநாள் போட்டி: 2025 டிசம்பர் 6, விசாகப்பட்டினம்

ALSO READ: விலா எலும்பில் உள் இரத்தப்போக்கால் அவதி.. ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..!

டி20 தொடர்

  • முதல் டி20: 2025 டிசம்பர் 9, கட்டாக்
  • 2வது டி20: 2025 டிசம்பர் 11, நியூ சண்டிகர்
  • 3வது டி20: 2025 டிசம்பர் 14, தர்மசாலா
  • 4வது டி20: 2025 டிசம்பர் 17, லக்னோ
  • 5வது டி20: 2025 டிசம்பர் 19, அகமதாபாத்