Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?

India and Pakistan at Premadasa Stadium T20I Record: நடப்பு சாம்பியனான இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் மும்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் டெல்லியில் நமீபியாவை இந்திய அணி தோற்கடித்தது. பாகிஸ்தானும் தனது தொடக்க ஆட்டங்களில் இரண்டிலும் வெற்றி பெற்றது.

India vs Pakistan: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?
ஆர். பிரேமதாச ஸ்டேடியம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Feb 2026 15:34 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி (India vs Pakistan) நாளை அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளும் இந்த ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இதுமட்டுமின்றி, இந்த ஸ்டேடியத்தில் இந்தியா 15 போட்டிகளிலும், பாகிஸ்தான் 7 போட்டிகளிலும் விளையாடியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டிக்கு முன்னபாக, இந்த ஸ்டேடியத்தில் இரு அணிகளின் டி20 சாதனையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் மும்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் டெல்லியில் நமீபியாவை இந்திய அணி தோற்கடித்தது. பாகிஸ்தானும் தனது தொடக்க ஆட்டங்களில் இரண்டிலும் வெற்றி பெற்றது.

ALSO READ: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!

ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்தியாவின் டி20 சாதனை:

இந்திய கிரிக்கெட் அணி இந்த கொழும்பு மைதானத்தில் மொத்தம் 15 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியும் அடங்கும். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஸ்டேடியத்தில் இந்தியா 4 டி20 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 3 முறை இலங்கை அணியிடமும், ஒரு முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்துள்ளது. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஷிகர் தவான் 284 ரன்களுடன் உள்ளார். அதேநேரத்தில், யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிரேமதாச ஸ்டேடியத்தில் பாகிஸ்தானின் டி20 சாதனை:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் மொத்தம் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி இலங்கையை 3 முறையும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை தலா 1 முறையும் வீழ்த்தியுள்ளது.

பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானுக்காக அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் உமர் அக்மல் ஆவார். இவர் 182 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்காக சயீத் அஜ்மல் 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் உள்ளார்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்.

பாகிஸ்தான் அணி

சல்மான் அலி ஆகா (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான், அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, உஸ்மான் தாரிக், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான்.