Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2029 Womens World Cup: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!

2029 Women’s ODI World Cup in 10 teams: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்குள், அடுத்த பதிப்பிற்கான ஒரு பெரிய மாற்றத்தை ஐசிசி (ICC) கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.

2029 Womens World Cup: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!
இந்திய மகளிர் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Nov 2025 23:28 PM IST

2025ம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் (2025 ICC Womens World Cup)  இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்குள், அடுத்த பதிப்பிற்கான ஒரு பெரிய மாற்றத்தை ஐசிசி (ICC) கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இன்று அதாவது 2025 நவம்பர் 7ம் தேதி நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் மகளிர் உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. இந்த முடிவுக்கு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பைகளின் வெற்றியே காரணம் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

ALSO READ: இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி எப்போது..? யாருடன் விளையாடுகிறது? அட்டவணை இதோ!

2029 உலகக் கோப்பையில் 10 அணிகள் விளையாடும்:


இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட செய்தி குறிப்பில், “2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நிகழ்வின் வெற்றியைக் கட்டியெழுப்ப ஆர்வமுள்ள ஐசிசி வாரியம், அடுத்த 2029 உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகளாக விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் மைதானத்தில் இருந்து நிகழ்வைப் பார்த்தனர், இது எந்த மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் இல்லாத அதிகபட்சமாகும். பார்வையாளர்களின் அதிகரிப்புடன், திரையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் புதிய சாதனைகளைப் படைத்தது” எனவும் தெரிவித்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025ம் ஆண்டில் அணிகளின் எண்ணிக்கை 8 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை:

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி பார்வையாளர்கள் மற்றும் ஒளிபரப்பில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்தப் போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தின. பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. பாகிஸ்தான் லீக் கட்டத்திலேயே வெளியேறியதால், அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் இந்தியாவில் நடத்தப்பட்டன.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறும்..? இடத்தை பட்டியலிட்ட பிசிசிஐ!

இந்திய மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஜியோஹாட்ஸ்டாரில் 185 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இது 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சமம். முழுப் போட்டியையும் 446 மில்லியன் மக்கள் பார்த்தனர். இந்த இறுதிப் போட்டியை ஒரே நேரத்தில் 21 மில்லியன் பேர் பார்த்தனர்.