Indian Women’s Team Schedule: இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி எப்போது..? யாருடன் விளையாடுகிறது? அட்டவணை இதோ!
Indian Womens Team Tour Of Australia 2026: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும். இந்த தொடரின் முதல் டி20 போட்டி சிட்னியில் நடைபெறும். 2வது போட்டி 2026 பிப்ரவரி 19ம் தேதி கான்பெராவிலும், 3வது போட்டி 2026 பிப்ரவரி 21ம் தேதி அடிலெய்டிலும் நடைபெறும்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் (ICC Womens Cricket Team) இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இடையே நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team), தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்றனர். இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய மகளிர் அணி எந்த அணிக்கு எதிராக அடுத்த போட்டியில் எங்கு, எப்போது விளையாடும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி யாருடன்..?
2025 ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற பிறகு, இந்திய மகளிர் அணிக்கு நீண்ட இடைவெளி கிடைக்கும். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடும். இந்த நேரத்தில், இந்திய அணி அனைத்து வடிவத் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும். இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணி 3 டி20 போட்டி தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும். இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 தொடர் நடைபெறும். அதன் பிறகு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!



இந்த சுற்றுப்பயணம் எப்போது தொடங்குகிறது..?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும். இந்த தொடரின் முதல் டி20 போட்டி சிட்னியில் நடைபெறும். 2வது போட்டி 2026 பிப்ரவரி 19ம் தேதி கான்பெராவிலும், 3வது போட்டி 2026 பிப்ரவரி 21ம் தேதி அடிலெய்டிலும் நடைபெறும். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி 2026 பிப்ரவரி 24ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறும். இந்த தொடரின் 2வது போட்டி 2026 பிப்ரவரி 27ம் தேதி ஹோபார்ட்டிலும், கடைசி போட்டி வருகின்ற 2026 மார்ச் 1ம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறும். அதேநேரத்தில், இரு அனிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 மார்ச் 6ம் தேதி பெர்த்தில் நடைபெறும்.
ALSO READ: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
இதன் பிறகு, இந்திய மகளிர் அணி மே மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்தத் தொடர் 2026 மே 28 முதல் 2026 ஜூன் 2 வரை நடைபெறும். இதன் பிறகு, மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறும். இந்திய அணியின் முதல் போட்டி 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப் போட்டி பர்மிங்காமில் நடைபெறும்.