Women’s World Cup Final: இந்திய அணிக்கு ஆதரவு! நமது கிரிக்கெட் வீரர்கள் எங்கே? விளாசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர்!
IND W vs SA W Final: தென்னாப்பிரிக்க எழுத்தாளருமான தான்யா வூர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி குறித்தும் பாராட்டியுள்ளார். மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தனது நாட்டின் அலட்சியப் போக்கு குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் தான்யா ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Womens World Cup) ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, வோல்பர்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்தநிலையில், தென்னாப்பிரிக்க எழுத்தாளருமான தான்யா வூர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket Team) வெற்றி குறித்தும் பாராட்டியுள்ளார். மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தனது நாட்டின் அலட்சியப் போக்கு குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் தான்யா ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மகளிர் அணியைப் பாராட்டிய தான்யா வூர், இந்தியா வெற்றிக்குத் தகுதியானது. ஆண்கள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பெண்கள் அணியை ஆதரிக்க மைதானத்தில் இருந்தது குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.
ALSO READ: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி முதல் சச்சின் வரை வாழ்த்து மழை!




இந்திய அணி வெற்றி பெற தகுதியே..
View this post on Instagram
இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர் தான்யா வூர், ”இந்தியா இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் வெற்றி தவிர்க்க முடியாதது, நீங்கள் அதற்கு தகுதியானவர். ஏனென்றால் நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்தீர்கள். உங்கள் ஆண் கிரிக்கெட் வீரர்கள் உங்களை ஆதரிக்க இருந்தனர். ஆனால், எங்கள் தரப்பில் இருந்து யாரும் அங்கு இல்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து யார் வந்தார்கள்? முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் எங்கே இருந்தார்கள்? இந்த நிகழ்வு அவர்களுக்குப் போதுமானதாக இல்லையா? இவ்வளவு ஜாம்பவான் வராதபோது, நம் அணி தோற்கும் என்று அவர்கள் நினைத்தார்களா? இதுதான் அவர்கள் அனுப்ப விரும்பிய செய்தியா?
நீங்கள் இந்த விளையாட்டை வாழ்க. இது உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு. நீங்கள் இந்த உலகக் கோப்பையின் வெற்றியாளர்கள், அதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்” என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்களைப் பாராட்டினார்.
ALSO READ: கிரிக்கெட்டில் மங்கிய வாய்ப்பு.. பயிற்சியாளராக பயணம்.. யார் இந்த அமோல் மஜும்தார்..?
இந்திய மகளிர் அணிக்கு ஆதரவாக குவிந்த ஜாம்பவான்கள்:
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை ஆதரிப்பதற்காக நவி மும்பையில் ஏராளமான பிரபலங்கள் கூடியது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா, விவிஎஸ் லட்சுமணன், மிதாலி ராஜ், அஞ்சும் சோப்ரா மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் அரங்கில் இருந்தனர். அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள், இந்நாள் வீரர்கள் யாரும் ஸ்டேடியத்தில் தென்படவில்லை.