AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

Suriya 46 Movie Release Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது வரிசையாக படங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சூர்யா 46 எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
சூர்யா 46Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Feb 2026 12:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வரும் நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் நடிகர் சூர்யாவின் 45-வது படமாக உருவாகி உள்ளது கருப்பு படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். படம் கடந்த 2025-ம் ஆண்டே வெளியாக இருந்த நிலையில் தொடர்ந்து ஏதேனும் காரணத்திற்காக வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள 46-வது படம் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது?

அதன்படி சூர்யா 46 படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி பேசியதாவது, சூர்யாவின் கருப்பு படம் வெளியான பிறகு சூர்யா 46 திரையரங்குகளில் வெளியாகும் அதாவது 3-4 மாதம் இடைவெளியில் வெளியாகும். கருப்புக்கும் சூர்யா 46 வெளியீட்டிற்கும் இடையில் போதுமான இடைவெளியை பராமரிக்க விரும்புகிறோம். கருப்பு ஏப்ரல் 2026 இல் வெளியாகும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் சூர்யா 46 ஐ எதிர்பார்க்கலாம். படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது, இன்னும் ஐந்து வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த படம் குறிப்பிடத்தக்க வயது வித்தியாசம் கொண்ட நபர்களுக்கு இடையிலான காதல் கதையை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தனுஷைப் பார்த்து கற்றுக்கொண்டேன்… செல்வராகவன் சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் நாக வம்சி பேச்சு:

Also Read… தொடர் தோல்வி படங்கள்.. 2 ஆண்டுக்கும் மேல் எந்த படமும் இல்லை – இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் தெரியும்?

Follow Us