Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷைப் பார்த்து கற்றுக்கொண்டேன்… செல்வராகவன் சொன்ன விசயம்

Director Selvaraghavan Interveiw: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் செல்வராகவன் தற்போது பலப் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்தும் நடிப்பு வாழ்க்கை குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷைப் பார்த்து கற்றுக்கொண்டேன்… செல்வராகவன் சொன்ன விசயம்
செல்வராகவன் மற்றும் தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Feb 2026 17:22 PM IST

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் கஸ்தூரி ராஜா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டு மகன்களும் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் முன்னணி இடத்தில் உள்ளனர். அதன்படி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது போலா தனுஷின் நடிப்பில் வெளியாகும் படங்களும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவர்களில் செல்வராகவன் இயக்குநராக அறிமுகம் ஆன நிலையில் தனுஷ் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். இதில் இயக்குநர் செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நடிகர் தனுஷ் படங்களை இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களின் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர்கள் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக இருந்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிப்பதை தனுஷிடம் இருந்து கற்றுக் கொண்டேன்:

இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம் நடிப்பில் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்துவது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வராகவன், என் தம்பி தனுஷ் D55-லிருந்து D56-க்கு மாறுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு நாள், நான் அவரை நிறுத்தி, ‘இதை எப்படி இப்படிச் செய்ய முடிகிறது?’ என்று கேட்டேன். அவர், ‘வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?’ என்று மட்டும் பதிலளித்தார்.

இப்போது யோசித்துப் பார்க்கும்போது, ​​அது ஒரு ஆசீர்வாதமாக உணர்கிறேன். முன்பு, ஒரு இயக்குநராக, நடிகர்களிடம் நான் எதிர்பார்க்கும் நடிப்பின் அளவு குறித்து மிகவும் கண்டிப்பாக இருந்தேன். நடிப்பு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நடிக்கத் தொடங்கியபோதுதான் அது உண்மையில் எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தனுஷ் என்னிடம், ‘ஒரு நாள், உனக்குப் புரியும்’ என்று கூறினார். இப்போதுதான் அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது. ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு நடிப்பு சரியாகப் பொருந்துவது எவ்வளவு முக்கியம், அதைச் சரியாகச் செயல்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சூப்பர் ஹிட் அடித்த ஃபர்சி சீரிஸ் பார்ட் 2 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர்கள்

இணையத்தில் வைரலாகும் செல்வராகவன் பேச்சு:

Also Read… வித் லவ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ