Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூப்பர் ஹிட் அடித்த ஃபர்சி சீரிஸ் பார்ட் 2 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர்கள்

Farzi Web Series 2nd Part Update: இந்தி சினிமாவில் முன்னதாக வெளியாகி பான் இந்திய அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இணையதள தொடர் ஃபர்சி. இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர்கள் தற்போது வெளியிட்ட அப்டேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹிட் அடித்த ஃபர்சி சீரிஸ் பார்ட் 2 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர்கள்
ஃபர்சிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 16:28 PM IST

இந்தி சினிமாவில் பிரபல இயக்குநர்களாக வலம் வருபவர்கள ராஜ் & டிகே. இவர்கள் இருவரும் இணைந்து இயக்கும் படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் தொடர்ந்து இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர்கள் ராஜ் & டிகே இவர்களின் இயக்கத்தில் வெளியான இணையதள தொடர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் காரணமாக அந்த தொடர்களின் அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்த்து மக்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி இவர்களது இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்சி ஆகிய தொடர்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ஃபர்ஸி என்ற இணையதள தொடர்.

இதில் நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, கே கே மேனன், ராஷி கண்ணா, புவன் அரோரா, சித்தரஞ்சன் கிரி, ஜாகீர் உசேன், ஜஸ்வந்த் சிங் தலால், அமோல் பலேகர், குப்ரா சைட், ரெஜினா கசாண்ட்ரா, காவ்யா தாபர், சித்தரஞ்சன் திரிபாதி, லோகேஷ் மிட்டல், விஜய் குமார், சாகிப் கர்னி மயூப் இந்தல்கர், அக்ஷய் குணாவத், சவுரவ் சக்ரவர்த்தி, மிருண்மயி காட்போல், அர்மான் பானுஷாலி, கபீர் கான் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். இந்த தொடர் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர்கள் ராஜ் & டிகே இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

ஃபர்சி சீரிஸ் பார்ட் 2 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர்கள்:

அதன்படி இந்த ஃபர்சி தொடர் கல்ல நோட்டை அடிக்கும் கும்பலையும் அதனை கட்டுப்படுத்தும் காவல்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் வறுமையில் இருக்கும் ஷாகித் கபூர் மற்றும் அவரது நண்பர் இருவரும் இணைந்து தங்களது ப்ரிண்டிங் ப்ரசில் ரூபாய் நோட்டுகளை போலியாக அடித்து அதனை புழக்கத்தில் விடுகிறார்கள்.

அந்த குற்றத்தை தடுக்கும் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சில் இருக்கும் விஜய் சேதுபதி அவர்களை கண்டுபிடிப்பதற்காக போராடுகிறார். இவர்களை கண்டுபிடித்து அவர்களை நெறுங்கும் சமயத்தில் அந்த தொடர்ந்து முடிந்துவிடுகிறது. இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இயக்குநர்கள் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… With Love: ரசிகர்களின் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. 3 நாட்களில் ‘வித் லவ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?

இயக்குநர்கள் ராஜ் & டிகே வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya: மௌனம் பேசியதே பட டயலாக்கை ரீகிரியேட் செய்த சூர்யா – வைரலாகும் வீடியோ!