Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

With Love: ரசிகர்களின் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. 3 நாட்களில் ‘வித் லவ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?

With Love Movie 3rd Day Collection: தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி மக்களிடையே பிரபலமாகிவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வித் லவ். இந்த படமானது வெளியாகி 3 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

With Love: ரசிகர்களின் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. 3 நாட்களில் ‘வித் லவ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?
வித் லவ் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Feb 2026 14:50 PM IST

டூரிஸ்ட் பேமிலி (Tourist family) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் டூரிஸ்ட் பேமிலி படத்திலே சிறு கேமியோ வேடத்தில் நடித்து, தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் மூலம்மக்களிடையே இயக்குநராக பிரபலமான அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம்தான் வித் லவ் (With Love) . இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியிருந்தது. இப்படமானது கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸானது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்திருந்தார். இப்படமானது ஃபீல் குட் லவ் ஸ்டோரியில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 3 நாட்களான நிலையில், மொத்தமான உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த வித் லவ் படமானது 3 நாட்களில் உலகளவில் சுமார் ரூ 11 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!

வித் லவ் படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

இந்த வித் லவ் படத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சரவணன், ரவி மரியா, ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் கேமியோ வேடத்தில் நடிகர் எம் சசிகுமார் மற்றும் டூரிட்ஸ் பேமிலி படத்தில் நடித்த கமலேஷ் ஜெகன் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனஸ்வரா மற்றும் அபிஷனின் ஜோடி அருமையாகவே இருந்தது. இந்த படம் பள்ளிப்பருவ காதலை தேடியலையும் கதாநாயகி மற்றும் நாயகனிடையே எவ்வாறு காதல் மலர்கிறது என்பது குறித்து கதையில் அமைந்திருந்தது.

இதையும் படிங்க: மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து – இயக்குநர் மாரி செல்வராஜ்

இந்த படமானது வெளியான முதல் நாளிலே பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டிருந்தது. எந்த ஒரு அறிமுக நடிகருக்கும் இந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அதன்படி இந்த வித் லவ் படம் வரும் 2026 மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.