Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Trisha Krishnan: 42 வயதிலும் அசராது ஒர்க்கவுட் செய்யும் திரிஷா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Trisha Fitness Video : தென்னிந்திய பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். இவர் பிரமாண்ட நடிகர்களுடன் படங்களில் ஜோடியாக இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் தனது 42 வயதிலும் தீவிரமாக அவர் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trisha Krishnan: 42 வயதிலும் அசராது ஒர்க்கவுட் செய்யும் திரிஷா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திரிஷா
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 17:26 PM IST

தமிழ் சினிமாவில் 22 வருடங்களை கடந்தும் கலக்கிவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். சினிமாவில் 22 ஆண்டுகளை கடந்தும் படங்களில் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். அந்த வகையில் நயன்தாராவை (Nayanthara) போலவே திரிஷாவும் பின்பற்றிவருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் கடந்த 2025ம் ஆண்டில் 4 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் கிட்டத்தட்ட 2 படங்கள் மட்டுமே இவருக்கு வரவேற்பை கொடுத்தது. கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்த தக் லைப் (Thug life) படத்தில் திரிஷா மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததால் விமர்சிக்கப்பட்டிருந்தார். இது இவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது. இதற்கு முன் அஜித் குமாருடன் (Ajith Kumar) விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதில் குட் பேட் அக்லி படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தனது 42 வயத்தை கடந்தும் தனது உடலை ஃபிட்டாக பராமரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை திரிஷா பகிர்ந்திருந்தார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: மங்காத்தா ரீயூனியன்.. அஜித் குமாரை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

நடிகை திரிஷா வெளியிட்ட ஜிம் ஒர்கவுட் குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

நடிகை திரிஷா எப்போதுமே தனது உடலை பராமரித்துவருகிறார். திரிஷாவிற்கு இத்தனை வயதா? என நேரில் பார்த்தாலும் கணிக்க முடியாத அளவிற்கு, இளம் நடிகைகளுக்கு போட்டியாக தற்போதும் சினிமாவில் இருக்கிறார். ஜிம்மில் இவர் கடினமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தனது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா கிருஷ்ணன் திருமணம் குறித்த சர்ச்சை :

நடிகை திரிஷா கிருஷ்ணன் 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் இவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகிவந்தது .

இதையும் படிங்க: அந்த ஹீரோ எனக்கு வாழ்க்கைத் துணை வேண்டும் – பிரியங்கா மோகன் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

அதற்கு தகவலுக்கு பதிலளிக்கும் விதத்தில் திரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தனக்கான கணவனையும் எனது வருங்காலத்தையும் நீங்களே முடுவு செய்யுங்கள், எப்போது ஹனிமூன் என்றும் சொல்லிவிடுங்கள்” என விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். இதன் பிறகே இவரின் திருமணம் குறித்த சர்ச்சை முடிவிற்கு வந்தது. தற்போது திரிஷா புது திரைப்படங்களுக்கான கதையைக் கேட்டுவருகிறார் என கூறப்படுகிறது.