Prem Kumar: அதைக்கேட்டு திரிஷா ரொம்பவே அழுதுட்டாங்க – இயக்குநர் பிரேம் குமார் சொன்ன விஷயம்!
C.Prem Kumar About Trishas Emotional 96 Script Reaction: தமிழ் சினிமாவில் பீல் குட் திரைப்படங்களை கொடுத்துவருபவர் சி.பிரேம் குமார். இவர் 96 என படத்தை இயக்கியதன் மூலம் பான் இந்திய அளவிற்கு பிரபலமானார். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், திரிஷா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் பீல் குட் திரைப்படங்களை இயக்குபவர் என்று நினைத்தால் நமக்கு முதலில் நினைவிற்கு வருபவர் இயக்குநர் சி.பிரேம் குமார் (C.Prem Kumar) சினிமாவில் ஆரம்பத்தில் கேமராமேனாக படங்களில் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் திரைப்படங்களை இயக்க ஆசைப்பட்ட இவருக்கு முதல் திரைப்படபாமாக அமைந்தது 96. இந்த திரைப்படத்தை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் திரிஷா கிருஷ்ணனை (Trisha Krishnan) வைத்து இவர் இயக்கியிருந்தார். இப்படமானது கடந்த 2018ம் ஆண்டில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அசத்தலான பள்ளிப்பருவ காதல் மற்றும் காதலியை மீண்டும் சந்திப்பது தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் பலரின் ஃபேவரட் திரைப்படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இப்படத்தை அடுத்ததாக புது புது படங்களில் ஒப்பந்தமாகி இவர் இயக்கிவருகிறார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு மெய்யழகன் (Meiyazhagan) என்ற படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் கார்த்தி, அரவிந்த் சுவாமி மற்றும் ஸ்ரீ திவ்யா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதை அடுத்ததாக சியான் விக்ரமின் நடிப்பில் புது படம் ஒன்றையும் தற்போது இயக்கிவருகிறார். இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய இவர், 96 பட கதையை திரிஷாவிடம் சொல்லும்போது நடந்த விஷயம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: A.R.முருகதாஸ் சார் என்னிடம் சொன்னது வேற.. சிக்கந்தர் பட ஸ்கிரிப்டில் பல மாற்றம் இருந்தது – ராஷ்மிகா மந்தனா!
நடிகை திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
96 பட கதையை கிரிஷாவிடம் சொன்னபோது அவரின் ரியாக்ஷன் குறித்து இயக்குநர் பிரேம் குமார் பேசிய விஷயம் :
ஆந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் பிரேம்குமார், “96 பட கதையை சொல்ல திரிஷாவின் வீட்டிற்கு சென்றபோது, அவர்தான் முதலில் வந்து கதவை திறந்தார், எனக்கு அது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவரின் வீட்டிற்கு சென்று உட்கார்ந்ததும் அவர் என்னிடம்,ஒரு 20 நிமிடம் மட்டும் கதையை சொல்லுங்க னு சொன்னாங்க. நான் உடனே சொன்னேன் 20 நிமிடத்தில் கதையை சொல்ல முடியாதே என கூறினேன், திரிஷா என்ன நினைத்தார்கள் என்றால் என்னை அதிக நேரம் கதை சொல்லவைத்து கஷ்டப்படுத்தவேண்டாமே என நினைத்தார்கள். அப்போது நான் யார் என்று கூட அவர்களுக்கு தெரியாது, நான் என்ன படம் பண்ணிருக்கேன்னு கூட தெரியாது.
இதையும் படிங்க: ஒன்றாக வெக்கேஷன் சென்ற நடிகைகள் நயன்தாரா – த்ரிஷா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்
உடனே அவரிடம் நான் என்னை பற்றியும் உங்களுக்கு முழுமையாக தெரியாது, நானா யாரை என்பதை என் கதைதான் சொல்லும் அதனால் ஒரு 4 :30 மணி நேரம் வேண்டும் கதை சொல்ல என கேட்டேன். அவர் உடனே நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் சொல்லுங்க என என்னிடம் கூறினார். உடனே இந்த 96 படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தேன். இப்படத்தின் முதல் பாடகி கதையை சொன்னபோதே அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அவ்வளவு நுட்பமாக படத்தின் கதையை அவங்க கேட்டுட்டு இருந்தாங்க. மேலும் இப்படத்தின் 2வது பாதையை கேட்டுமுடித்துவிட்டு அவங்க அப்படியே அவரின் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தார். மேலும் உடனே படம் பண்ணுறேன்னு சொல்லிட்டாங்க” என இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார்.