C Prem Kumar : 96 பார்ட் 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. புதிய படம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் பேச்சு!
96 Part 2 Update : தமிழ் சினிமாவில் வெளியாகி ஏராளமான ரசிகர்களைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது 96 திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் பாகம் 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் நடந்து வரும் நிலையில், மேலும் இவர் இயக்கும் புதிய படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சி பிரேம் குமார் (C Premkumar). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக கார்த்தி (Karthi), அரவிந்த் சுவாமி (Arvind Swamy) மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு உறவுகளுக்கு நடக்கும் பாசப்போராட்டம் குறித்து இப்படத்தின் கதைக்களம் இருந்தது. கடந்த 2024ம் மானுட வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறாவிட்டாலும், விமர்சனங்கள் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு முன் இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. கடந்த 2018ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Vijay Sethupathi and Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது எதிர்பாராத வெற்றியைப் பெற்று, நல்ல வரவேற்பைக் கொடுத்திருந்தது.




இந்த படத்தினை தொடர்ந்து 96 பார்ட் 2 (96 Part 2) படத்தை இயக்கும் பணியில் இயக்குநர் சி பிரேம் குமார் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் வீடியோ காலில் பேசிய இயக்குநர் பிரேம் குமார். 96 பார்ட் 2 மற்றும் புதிய படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் பிரேம் குமார் கொடுத்த அப்டேட் :
சமீபத்தில் பாடகி சின்மயி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் வீடியோ கால் மூலம் பேசிய இயக்குநர் சி பிரேம் குமார், “96 பார்ட் 2 படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக முடிந்தது. மேலும் அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். இந்த படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்துடன் இருக்கும். மேலும் இப்படமானது 96 பார்ட் 2 படத்தை தொடர்ந்து உருவாகும்” என்று இயக்குநர் பிரேம் குமார் பேசியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பிரேம் குமார் கூறிய திரில்லர் கதை திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தன தகவல்கள் சமீபகாலமாக வெளியாகிவரும் நிலையில், உண்மையான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சி பிரேம் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
96 பார்ட் 2 படம் :
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம்தான் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி மாறும் திரிஷா இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானதும் அந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவே இருந்தது. மேலும் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத கதைக்களம் கொண்ட படம் என்றே கூறலாம்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் இந்த 96 பார்ட் 2 படமும் உருவாக்கவுள்ளது. ஆனால் இப்படத்தின் கதைக்களம் 96 பார்ட் 1ன் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இயக்குநர் பிரேம்குமார் கூறியிருந்தார். மேலும் இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.