Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa : மீண்டும் தள்ளிப்போன தனுஷின் ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!

Kuberaa Trailer Release Re-Postponed : இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் குபேரா. நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் தனுஷின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று 2025, ஜூன் 14ம் தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியுடன் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Kuberaa : மீண்டும் தள்ளிப்போன தனுஷின் ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!
குபேரா படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 14 Jun 2025 14:47 PM

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் எனப் பல திறமைகளைக் கொண்டவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் முன்னணி நடிப்பில் பான் இந்தியப் படமாக உருவாகியிருப்பது குபேரா (Kuberaa). இந்த படத்தைத் பிரபல தெலுங்கு பிரபல இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் நாகார்ஜுனா (Nagarjuna) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தெலுங்கு மொழியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் ஆரம்பத்தில் 2025, ஜூன் 13ம் தேதியில் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியுடன் வெளியாகவிருந்தது. பின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து தொடர்பாக இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியினை படக்குழு மொத்தமாக வரும் 2025, ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து.

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் 2025, ஜூன் 14ம் தேதியில் வெளியிடப்படும் என்றும் படக்குழு கூறியிருந்தது. இந்நிலையில், அதைத் தொடர்ந்து படக்குழு குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீசை தேதியில் மீண்டும் மாற்றியுள்ளது. அதன்படி வரும் 2025, ஜூன் 15ம் தேதியில் நடைபெறும் , குபேரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் வைத்தே படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதற்காகப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

தனுஷ் – நாகார்ஜுனாவின் குபேரா :

இந்த குபேரா படமானது கடந்த 2023ம் ஆண்டு தனுஷ் 51 என அறிவிக்கப்பட்டது. வாத்தி படத்தைத் தொடர்ந்து இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கில் கதாநாயகனாக மீண்டும் களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை நடித்திடாத பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த குபேரா படத்தில் தனுஷிற்கு இணையான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது, பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கிறது. மேலும் இப்படமானது சுமார் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குபேரா படத்தின் கதைக்களம்

இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பான் இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில்தான் முதன் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ஒரு அரசியல் மற்றும் பணம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இயக்குநர் சேகர் கம்முலா இந்த படமானது அரசியல் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த படம் பான் இந்திய அளவில் வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்ப்பாக்கப்படுகிறது. வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் படத்தின் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....