Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்

Drishyam 3: நடிகர் மோகன்லாலின் நடிப்பில் முன்னதாக வெளியான த்ரிஷ்யம் பாகம் ஒன்று மற்றும் த்ரிஷ்யம் பாகம் இரண்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
த்ரிஷ்யம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Jun 2025 21:53 PM

மோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). இவர் மலையாளத்தில் பெரிய நடிகராக அதிக ரசிகர்களை கொண்டுள்ளவராக உள்ளார். தமிழில் இவர் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் இவரது படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே நடிகர் மோகன்லாலின் சினிமா வாழ்க்கை வெற்றியின் உச்சத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த 2025-ம் ஆண்டில் ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் நடிகர் மோகன்லாலின் நடிப்பில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான த்ரிஷ்யம் படத்தின் தொடர்ச்சியான 3-வது பாகம் எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 ஷூட்டிங் எப்போது?

த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு சூப்பரான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் உடன் இணைந்து த்ரிஷ்யம் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கும் என்று தெரிகின்றது.

மோகன்லாலின் வரிசையில் இருந்த ராம் படம் தற்போது நடைபெறாத காரணத்தால் இந்த த்ரிஷ்யம் படத்தின் பணிகள் தொடங்கியதாக சினிமா வட்டாரங்களில் தகல்கள் தெரிவிக்கின்றது. மேலும் படம் குறித்த அப்டேட்டை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் மோகன்லால் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம்:

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்றப் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசஃப் எழுதி இயக்கி இருந்தார். நாயகனாக நடிகர் மோகன்லால் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் 2 கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படமும் ரசிகர்களிடையே எந்த ஏமாற்றத்தையும் அளிக்காமல் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் பாகத்தில் மோகன்லால் மறைத்த குற்றத்தை எப்படி மறைத்தார் என்பதை விளக்கும் விதமாக இரண்டாம் பாகம் இருந்தது. இது ரசிகர்களை திருப்தி அடையச் செய்வதாகவே இருந்தது.

முதல் பாகம் ரீமேக் செய்தது போல இந்த இரண்டாம் பாகத்தை இந்தியில் மட்டும் ரீமேக் செய்தனர். தமிழில் சில காரணங்களால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ரீமேக் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.