Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் மொபைல் தொலைந்து போய்விட்டதா? முதல் 15 நிமிடங்கள் மிக முக்கியம்… ஏன் தெரியுமா?

உங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் பணம் பறிபோவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். தொலைபேசி தொலைந்த பிறகு முதல் 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுப்பது மோசடி மற்றும் தரவு திருட்டைத் தடுக்கலாம்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Feb 2026 21:54 PM IST
உங்கள் தொலைபேசி தொலைந்த பிறகு முதலில் உங்கள் மொபைல் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேரை அழைத்து உங்கள் சிம் கார்டை பிளாக் செய்ய வேண்டும். இது ஓடிபி, போன் கால், எஸ்எம்எஸ் உங்கள் போனுக்கு வராமல் தடுக்க முடியும்.  மோசடி செய்பவர்கள் உங்கள் எண்ணைப் பயன்படுத்தி எந்த பேங்க், யுபிஐ சேவைகள் ஆகியவற்றை அணுகுவதை இது தடுக்கும்.

1 / 5
சிம் கார்டை பிளாக் மட்டும் போதாது. உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு மொபைல் பேங்கிங், யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோருங்கள். மேலும், போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கவும். இந்த விரைவான நடவடிக்கை உங்களுக்கு தெரியாத பரிவர்த்தனைகளைத் தடுக்கலாம்.

2 / 5
உங்கள் ஸ்மார்ட்போன் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு போனில் Find My Device அல்லது ஐபோனில் Find My iPhone-ஐப் பயன்படுத்தவும். இது உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்யவும், அதன் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அனைத்து டேட்டாக்களையும் அழிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

3 / 5
உங்கள் இமெயில், வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் கிளவுட் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றவும். குறிப்பாக இமெயில் கணக்குகள் மிகவும் முக்கியம். அவை பிற சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வலுவான, தனித்துவமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தவும். முடிந்தவரை 2FA ஐ இயக்கவும்.

4 / 5
காவல்துறையிடம் FIR-ஐப் பதிவு செய்து தொலைபேசியின் IMEI எண்ணைத் தடுப்பது மிகவும் முக்கியம். இது ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாததாக ஆக்குகிறது. இது கண்காணிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், இது காப்பீட்டு கோரிக்கைகளுக்கு உதவுகிறது. எதிர்காலத்தில் மோசடிகளுக்கு எதிராக ஒரு இது சட்டப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

5 / 5