Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கு சினிமாவில் ரோம்-காம் வெளியான பாணியில் குஷியை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Kushi Movie OTT Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் குஷி. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியலும் மக்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் ரோம்-காம் வெளியான பாணியில் குஷியை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
குஷிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Feb 2026 22:16 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குஷி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu) நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் முரளி சர்மா, சச்சின் கெடேகர், பிரம்மானந்தம், வெண்ணெலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, சத்ரு, சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோகினி, ஜெயராம், சரண்யா பிரதீப், ஸ்ரீகாந்த் ஐயங்கார், ஜீவன் குமார் நாயுடு, கீதா பாஸ்கர், மாணிக் ரெட்டி, அலி, சித்தார்த் கொல்லப்புடி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் எர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Silambarasan: எனக்கு அந்த மாதிரியான மனைவிதான் வேணும் – சிலம்பரசன் சொன்ன விஷயம்!

விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அப்பா நாத்திகராகவும் சமந்தாவின் அப்பா ஆத்திகராகவும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் குடும்பத்திற்கு தெரியவரும் போது பெரிய பிரச்சனையே வெடிக்கிறது. இவை அனைத்தையும் மீறி சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அவர்கள் குடும்பத்தினருடன் எப்படி சேர்ந்தனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சாம்ராஜியம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு ஆனா, அந்த க்ரீடாத அணிய தகுதி யாருக்கு இருக்கு? – இணையத்தில் வைரலாகும் லெகசி தொடரின் டீசர்