AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போக்கிரி படம் என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது – நடிகர் மகேஷ் பாபு ஓபன் டாக்

Actor Mahesh Babu: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

போக்கிரி படம் என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது – நடிகர் மகேஷ் பாபு ஓபன் டாக்
நடிகர் மகேஷ் பாபு Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Feb 2026 11:45 AM IST

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பலப் படங்கள் தமிழில் ரீ மேக் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தெலுங்கு சினிமாவில் வெளியான படம் போக்கிரி. இந்தப் படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் இலியானா டி குரூஸ், பிரகாஷ் ராஜ், நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம், அலி, வேணு மாதவ், சத்ய பிரகாஷ், ஜி.வி. சுதாகர் நாயுடு, சுப்பராஜு, அஜய், மாஸ்டர் பரத், சுதா, கிருஷ்ணுடு, சத்யம் ராஜேஷ், ப்ருத்விராஜ், நர்சிங் யாதவ், பந்த்லா கணேஷ், பண்ட்லா கணேஷ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான இந்திரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வைஷ்ணோ அகாடமி சார்பாக தயாரிப்பாளர்கள் பூரி ஜெகநாத் மற்றும் மஞ்சுளா காட்டமனேனி இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

போக்கிரி படம் என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது:

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு சமீபத்திய பேட்டி ஒன்றில் போக்கிரி படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, ‘போக்கிரி’ திரைப்படம் எனக்கு எல்லாவற்றையும் மாற்றியமைத்த ஒரு படம். அது என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது. 2006-ல் அது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றிருந்தன. அதே போன்ற ஒரு சூழ்நிலையை இப்போது ‘வாரணாசி’ படத்திலும் நான் அனுபவித்து வருகிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்து உள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… நாயகனாக தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகளைக் கடந்த சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்

இணையத்தில் கவனம் பெறும் மகேஷ் பாபுவின் பேச்சு:

Also Read… தாய் கிழவி பட இயக்குநரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. சைலண்டாக முடிந்த புரோமோ ஷூட்? – வைரலாகும் தகவல்!

Follow Us