நாயகனாக தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகளைக் கடந்த சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்
14 Years of Sivakarthikeyan : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவடைந்ததது. இதனை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 03-ம் தேதி வெளியான மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்தது. தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.




தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகளைக் கடந்த சிவகார்த்திகேயன்:
சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது டாப் 10 நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் 100 கோடி ரூயாய்க்கு அதிகமாக வசூலித்து வருகின்றது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது. மேலும் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… நாளை சிம்புவின் பிறந்த நாளில் வெளியாகும் அரசன் பட அப்டேட் – வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
14 years of #Marina – Our #SK @Siva_Kartikeyan annan’s debut film as a HERO! ❤️🔥
He turned hurdles into stepping stones and won millions of hearts. His journey proves that dreams come true when you never give up! 💪#14YearsofSKism #14YearsofMarina @pandiraaj_dir pic.twitter.com/oUK3TCtm1L
— All India SKFC (@AllIndiaSKFC) February 3, 2026
Also Read… Pallichattambi: கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!