Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karna: ‘சூர்யாவின் கர்ணா பட திட்டமும் விரைவில் நிறைவேறும்’ – இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்!

Suriyas Karna Film Status : பிரபலமான இந்தி இயக்குநர்களில் ஒருவர்தான் ராகேஷ் ஓம்பிரகாஷ். இவர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கர்ணா என்ற படத்தை இயக்கவுள்ளதாக முன்னதாகவே கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் நிலை என்ன என்பது குறித்து ராகேஷ் ஓம்பிரகாஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Karna: ‘சூர்யாவின் கர்ணா பட திட்டமும் விரைவில் நிறைவேறும்’ – இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்!
சூர்யா கர்ணா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Feb 2026 18:02 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக வலம் வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களானது வெளியாகிவருகிறது. தற்போது சூர்யா, தெலுங்கு மற்றும் மலையாள மொழி இயக்குநர்களின் இயக்கத்தில் புது திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venkey Atluri) இயக்கத்தில் உருவாகிவரும் படம் சூர்யா46. இதில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், தற்போது மலையாளத்தில் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 படத்தில் நடித்துவருகிறார். இதை தொடர்ந்து இந்தி இயக்குநரான ராகேஷ் ஓம்பிரகாஷ் (Rakeysh Omprakash) இயக்கத்தில், சூர்யா கர்ணா (Karna) என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது மகாபாரதத்தின் சிறப்பான கதாபாத்திரமான கர்ணனை பற்றிய படம் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் நிலை என்ன என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் வெளிப்படையக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வித் லவ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டன் சொன்ன விமர்சனம்

கர்ணா படத்தின் நிலை குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இந்தி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ், அதில் கர்ணா படம் குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “நான் தொடர்ந்து கர்ணா படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் செய்துவருவதால், தற்காலிகமாக படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே 6 பாடல்களை இசையமைத்துள்ளார். மேலும் வெகு விரைவில் இப்படத்தின் திட்டம் நிறைவேறும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியது குறித்து வைரலாகும் பதிவு :

கடந்த 2001ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனின் அக்ஸ் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராகேஷ் ஓம்பிரகாஷ். அதனை தொடர்ந்து, டெல்லி -6, தீன் தேய் பாய், டூஃபான் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் சூர்யாவுடனும் புது படத்தில் இணையவுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ராம் சரணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!

இப்படம் கர்ணனின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டிலே இதன் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் சூர்யாவின் 50வது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த சூப்பர் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.