Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி – கராத்தே பாபு படக்குழு

Karathey Babu Movie Team: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கராத்தே பாபு. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி – கராத்தே பாபு படக்குழு
கராத்தே பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Feb 2026 13:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தொடர்ந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். தொடர்ந்து நாயகனாக இவரது நடிப்பில் வெளியான படங்களை கொண்டாடிய மக்கள் தற்போது இவரது தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளியாக உள்ள படங்களை பார்ப்பதற்காக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் கலவையான விமர்சனத்தை ரசிகர்களிடையே பெற்றாலும் நடிகர் ரவி மோகனின் கதாப்பாத்திரத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் வில்லனாக ரவி மோகனின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கராத்தே பாபு. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி:

இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை தௌடி ஜிவால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், Vtv கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், கத்தி நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான கராத்தே பாபு படத்தின் டீசர் மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றதற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Also Read… Thalapathy Vijay: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் – தளபதி விஜய்!

கராத்தே பாபு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?