29 The Film: விது – ப்ரீத்தி அஸ்ரானியின் ’29 தி பிலிம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!
Vidhus 29 The Film Shooting Wraps: தமிழ் சினிமாவில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விது. இவர் ரெட்ரோ படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடிக்கும் படம்தான் 29. இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், ஷூட்டிங் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025 மே மாதத்தில் வெளியான ரெட்ரோ (Retro) என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விது (Vidhu). இவர் அந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு (Suriya) இணையான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் பிரபலத்தை அடுத்து இவர் நாயகனாக நடித்துவந்த படம்தான் 29 தி பிலிம் (29 The Flim). இந்த படத்தை பிரபல இயக்குநரான ரத்னகுமார் (Rathnakumar) இயக்கியுள்ளார். இவர் மேயாத மான் (Meyadha Maan), ஆடை (Aadai) போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் முழுவதுமாக உருவாகியுள்ள படம்தான் 29. இந்த படத்தில் விது நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார்.
இவர் கவினின் கிஸ் படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரஜினிகாந்த் எழுதும் கதை.. நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!
29 தி பிலிம் படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Wrapping #29TheFilm on the 29th ❤️
Every journey has a destination. Ours ends here, so yours can begin soon 🫶🏼#29ShootWrap
▶️ https://t.co/oAyw48eRkPSpring release in theatres near you!!!!#29TheFilm@kaarthekeyens @Dir_Lokesh@karthiksubbaraj @MrRathna @RSeanRoldan… pic.twitter.com/lxlO4vl6Oh
— GSquad (@GSquadOffl) January 29, 2026
இந்த 29 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்கோட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான காதல் கதையில் தயாராகியுள்ளது. இதில் நடிகர் விது சென்னையில் இளைஞன் வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வளரும் வயதில் என்னை ஊக்குவிக்க யாருமில்லை… சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு!
மேலும் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானியும் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை ஆரம்பத்தில் 2026 பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இதையடுத்து மார்ச் அல்லது ஏப்ரல் இறுதியில் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறது. இது குறித்த அறிவிப்புகளையும் விரைவில் படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.