‘இது விஜய் அண்ணாவின் அன்பு சாம்ராஜ்யம்’- நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்!
Director Rathnakumar X Post: கோலிவுட்டில் சிறந்த எழுத்தாளரும், இயக்குநருமாக இருந்துவருபவர் ரத்னகுமார் இவரின் இயக்கத்தில், தமிழில் தற்போது 29 தி மூவி என்ற படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் நேற்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழா நடந்த நிலையில், அது குறித்து ரத்னகுமார் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இருப்பவர் ரத்ன குமார் (Rathnakumar). இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான “மேயாத மான்” (Meyadha Maan) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதற்கு முன் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj) பென்ச் டாக்கீஸ் என்ற படத்திலும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து ஆடை (Aadai) , குளு குளு போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இதில் இவருக்கு மேயாத மான் படமானது எதிர்பார்க்காத வரவேற்பை கொடுத்திருந்தது. இதை அடுத்தாக லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றியிருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கிவருகிறார். அந்த படம்தான் 29. இதில் ரெட்ரோ படத்தில் மெயின் வில்லனாக நடித்த விது (Vidhu) கதாநாயகனாக நடித்துவருகிறார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் ரத்னகுமார் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மிகப்பெரிய ரசிகர். இந்நிலையில் நேற்று (2025 டிசம்பர் 27ம் தேதி) ஜன நாயகன் (Jana Nayagan) பட ஆடியோ லான்ச் நடந்த நிலையில், அது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்
தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட ரத்னகுமார்:
Picture of the Day Month Year Decade 😍😍😍♥️♥️♥️🤗🥳🥳.
This is @actorvijay na’s “ANBU SAAMRAAJYAM 🫠”. #ThalapathyThiruvizha #JanaNayaganAudioLanuch #Thalapathy pic.twitter.com/hy11OAC0Ma
— Rathna kumar (@MrRathna) December 27, 2025
அந்த பதிவில், இயக்குநர் ரத்னகுமார், “இது எங்கள் தளபதி அண்ணாவின் சாம்ராஜ்யம்” என அந்த எக்ஸ் பதிவில் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. மேலும் அவர் ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ரத்னகுமாரின் புது படம் :
இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் காதல் திரைப்படம்தான் 29. இதில் நடிகர் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். இந்த படமானது 90ஸ் காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுவருகிறதாம்.
இதையும் படிங்க: அனிருத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய விசயம்… என்ன தெரியுமா?
இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிற்து. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழுவும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.