Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

Vidhu New Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான எழுத்தாளராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வருபவர் ரத்னகுமார். இவரின் இயக்கத்தில் தமிழில் புதியதாக திரைப்படம் உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகபரவி வருகிறது.

ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
ரத்னகுமாரின் புது படம்
Barath Murugan
Barath Murugan | Published: 10 Dec 2025 16:05 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) லியோ (Leo), மாஸ்டர் (Master) படங்களின் உதவி எழுத்தாளராக இருந்துவந்தவர் இயக்குநர் ரத்னகுமார் (Rathna Kumar). இவர் தமிழில் ஏற்கனவே மேயாத மான் (Meyaadha Maan), ஆடை மற்றும் குளு குளு போன்ற திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் புதியதாக படம் உருவாக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகிவந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj) ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனம் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்கோட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் கதைக்களமானது வித்தியாசமான கதையில் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக, சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விது (Vidhu) நடித்துவருகிறார். இவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு படக்குழு “29” என டைட்டில் வைத்துள்ளது. தற்போது வெளியான இந்த டைட்டில் டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் – நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்

விது மற்றும் ரத்னகுமார் கூட்டணியில் உருவகம் 29 படத்தின் டைட்டில் டீசர் பதிவு :

இந்த படத்தில் மூலமாக நடிகர் விது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். இவர் தமிழில் ஏற்கனவே அயோத்தி, கிஸ் போன்ற படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது மலையாள மொழிகளிலும் நடித்தவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 29 படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேனு 2025-ம் ஆண்டில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!

இந்த படமானது வேலையை தேடிவந்த ஒரு இளைஞனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காதல், எமோஷனல் கதைக்களம் அதிகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் தொடர்பான அறிவிப்புக்களை தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.