மீண்டும் தள்ளிப்போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்? வைரலாகும் தகவல்
Love Insurance Kompany Movie: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் வெளியீடு முன்னதாக பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் படம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிகராக லவ் டுடே படத்தில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ட்ராகன் மற்றும் டியூட். தொடர்ந்து லவ் டுடே படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களும் 100 கோடி வசூலை ஈட்டி ஹாட்ரிக் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. 2019-ம் ஆண்டு இது தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் தலைப்பு என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இப்படி இருக்கும் சூழலில் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிபோவதவாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




மீண்டும் தள்ளிப்போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்:
அதன்படி படதின் வெளியீடு முதலாவதாக 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து படம் அக்டோபர் மாதம்17-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் வெளியீட்டிற்காக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதக இருந்தது. ஆனால் தற்போது படம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LIK postponed from the Dec 18th release !!
Film planning for Feb 12/13 Valentine’s day week release♥️Good move as Avatar is coming on the 19th & also the film will have a good gap window as PradeepRanganathan’s Dude got released recently👌 pic.twitter.com/8tZUCxnu3i
— AmuthaBharathi (@CinemaWithAB) December 9, 2025
Also Read… லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்