Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arasan: மதுரையில் தொடங்கும் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த சிலம்பரசன்!

Arasan Shooting Update: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் அரசன். சமீபத்தில் மலேசியாவில் , நகைக்கடை திறப்பு விழாவில் பேசிய சிம்பு, அரசன் ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.

Arasan: மதுரையில் தொடங்கும் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த சிலம்பரசன்!
சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Dec 2025 17:40 PM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் சிலம்பரசனும் முக்கிய நாயகனாக இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது சிலம்பரசன், இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில், அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 6ம் தேதியில் மலேசியாவில் (Malaysia) ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் சிலம்பரசன் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் வரும் 2025 டிசம்பர் 9ம் தேதியில் அரசன் பட ஷூட்டிங்கில் இணைவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து சிலம்பரசன் பேச்சு :

அந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்களிடம் பேசிய சிலம்பரசன், “நான் இந்த நிகழ்ச்சியை முடித்த கையோட நேராக அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்குத்தான் செல்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங், மதுரையில் வரும் 2025 டிசம்பர் 9ம் தேதியில் தொடங்குகிறது. இப்போது போல எப்போதும் உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு கிடைக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி” என அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அரசன் திடைப்பட ஷூட்டிங் குறித்து நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோ :

இந்த அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகி யார் என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துவருகிறார்.

இதையும் படிங்க: அமரன் படம்போல பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சுவாரஸ்ய தகவல்!

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்தவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிடுவதற்கு திட்டமிட்டுவருகிறது. விரைவில் இப்படத்தன் ஷூட்டிங் தொடக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.