Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna: நேரம் வரும்போது தெரிவிப்போம்.. தனது திருமணம் குறித்து மனம்திறந்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna About Her Wedding: பான் இந்திய ரசிகர்களின் நேஷனல் கிரஸாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரும், நடிகர் விஜய் தேவரகொண்டவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அவரின் திருமணம் குறித்து ராஷ்மிகா மனம் திறந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

Rashmika Mandanna: நேரம் வரும்போது தெரிவிப்போம்.. தனது திருமணம் குறித்து மனம்திறந்த ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 05 Dec 2025 17:01 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி (Dikshit Shetty) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஒரு பெண்ணின் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளின்போது நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபலம் ஒருவரை காதலிப்பதாக ஒத்துக்கொண்டார். அந்த பிரபலம் வேறு யாருமில்லை நடிகர் விஜய் தேவரகொண்டா தான் (Vijay Deverakonda).

இவர்கள் இருவரும் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் தங்களின் இல்லத்தில் ரகசியமாக நிச்சயம் செய்துகொண்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது திருமணம் குறித்து ராஷ்மிகா வெளிபடையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ100 கோடி கிளப்பில் இணைந்த தனுஷின் தேரே இஷ்க் மே.. உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?

தனது திருமணம் குறித்து ஓபனாக பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா:

அந்த நேர்காணலில் பேசிய ராஷ்மிகா மந்தனா, தங்களின் திருமணத்தை உறுதிசெய்யவோ அல்லது இல்லை என மறுக்கவோ இல்லை. அவர் அதில், “அந்த விஷயம் பற்றி பேச அவசியம் வரும்போது, நாங்கள் பேசுவோம்” என தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகிவருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்துவருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியேவருகிறது. மேலும் இவர்கள் சுற்றுலா சென்றாலும் ஒரே இடத்திற்கு செல்வது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருவதுண்டு.அந்த வகையில் கடந்த 2025ம் அக்டோபர் மாதத்தில் இருவரும் தங்களின் இல்லத்தில் வைத்து ரகசியமாக நிச்சயம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: குற்றப் புலனாய்வு கதையில்… மம்முட்டி – விநாயகனின் கலம் காவல் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

மேலும் இவர்களின் திருமணம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவந்தது. இது குறித்து விஜய் தேவரகொண்டவும் சரி, நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சரி, எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்களின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.