AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா

The Girlfriend Movie OTT Update: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கேர்ள்ஃப்ரண்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா
தி கேர்ள்ஃபிரண்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Feb 2026 22:08 PM IST

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளிலும் இதுவரை 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த 5 படங்களும் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரது படங்கள் தொடர்ந்து ரூபாய் 1000 கோடிகள் வசூலித்து சினிமாவில் வசூல் ராணியாக உள்ளார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சாவா, சிக்கந்தர், குபேரா, தம்மா மற்றும் தி கேர்ள் ஃப்ரண்ட் ஆகியப் படங்கள் வெளியாகி உள்ளது. இதில் இறுதியாக தி கேர்ள் ஃப்ரண்ட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் கடந்த 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் தி கேர்ள்ஃப்ரண்ட் படம்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல், ராகுல் ரவீந்திரன், ராவ் ரமேஷ், ரோகினி மொல்லேட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டு தல எஃப்ஜேவை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 12 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் ஜெய்யின் நவீன சரஸ்வதி சபதம் படம்

Follow Us