நிஜமாவே விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவிற்கு நிச்சயம் முடிந்ததா? வைரலாகும் வீடியோ
Rashmika Mandanna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிமா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக தகவல்கள் வெளியானது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் வேறு வேறு படங்களில் நடித்து இருந்தாலும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து சப்போர்ட் செய்து வந்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இருவரும் வெக்கேஷனுக்கு சென்று ஒரே இடத்தில் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தது ரசிகர்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் உடைகளை பல இடங்களில் ராஷ்மிகா மந்தனா போட்டு இருந்தது இவர்கள் இருவரும் காதலித்து வருவதை ரசிகர்களிடையே மேலும் உறுதி செய்தது. இப்படி வதந்திகளாகவே பல மாதங்களாக இந்த செய்திகள் பரவி வந்தது.
இந்த நிலையில் பல மாதங்களாக காதலில் இருந்து வந்த நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அதிகரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




நிஜமாவே விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவிற்கு நிச்சயம் முடிந்ததா?
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது நாயை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகாவின் கையில் ஒரு மோதிரம் இருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயம் நிஜமாகவேதான் நடந்து இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதா? நடிகர் மேத்யூ தாமஸ் விளக்கம்!
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… தனி ஒருவன், வேலைக்காரன் படங்களை புகழ்ந்த ரசிகர்… மோகன் ராஜா வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு