தனி ஒருவன், வேலைக்காரன் படங்களை புகழ்ந்த ரசிகர்… மோகன் ராஜா வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
Director Mohan Raja: தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர் மோகனின் மூத்த மனக் தான் இயக்குநர் மோகன் ராஜா. இவர் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja). இவர் கடந்த 20010-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஹனுமன் ஜங்சன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன், ஜெகபதி பாபு, வேணு, லயா, சினேகா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மலையாள சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான தென்காசிப்பட்டணம் என்ற படத்தை ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் ஜெயம். கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் மோகன் ராஜா.
இந்தப் படத்தில் இவரது தம்பி ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தகது. இந்தப் படமும் கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி மற்றும் வேலாயுதம் என அனைத்தும் படங்களும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் என இரண்டு படங்களும் இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ரீமேக் செய்த படங்களை விட அவரே எடுத்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ரசிகரின் பாராட்டால் நெகிழ்ந்த இயக்குநர் மோகன் ராஜா:
இந்த நிலையில் சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் வேலைக்காரன் மற்றும் தனி ஒருவன் ஆகிய படங்களைப் பார்த்தது குறித்து பதிவிட்டு இருந்தார். மேலும் அந்தப் பதிவில் இந்த மாதிரியான படங்களை எப்போது மறுபடியும் கொடுப்பீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் மோகன் ராஜா உங்களைப் போன்றவர்கள் ஒரு பெரிய உந்துதல் விரைவில் அப்டேட்களுடன் திரும்புவேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் மோகன் ராஜாவின் எக்ஸ் தள பதிவு:
People like you are a big motivation
Will soon get back on the update ❤️👍 https://t.co/i9wkcE9aQT— Mohan Raja (@jayam_mohanraja) October 11, 2025
Also Read… காமெடி ட்ராமா பிடிக்குமா? அப்போ இந்தியில் இந்த பதாய் ஹோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்