இந்திரா நூயி: சென்னையில் பிறந்த இவர் உலகின் முன்னணி தொழில்துறை தலைவர்களில் ஒருவர். அமெரிக்காவின் PepsiCo நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் தலைவர். உலகளவில் சக்திவாய்ந்த தொழில்முனைவோர் பெண்களில் ஒருவராக பலமுறை பட்டியலிடப்பட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் 2026: நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பெண்கள்..
International Women's Day 2026: இந்த ஆண்டின் மகளிர் தினத்தின் (மார்ச் 8, 2026) கருப்பொருள் “Rights. Justice. Action. For All Women and Girls” என்பதாகும். இந்த நாளில் பல தடைகளை தாண்டி சாதனை படைத்த இந்திய பெண்களை நாம் நினைவுகூர்கிறோம்.
கோப்பு புகைப்படம்
மார்ச் 7, 2026: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் கலாச்சாரம், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை கௌரவிக்கும் நாளாக இது கருதப்படுகிறது. மேலும், பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இது விளங்குகிறது.
இந்த ஆண்டின் மகளிர் தினத்தின் கருப்பொருள் “Rights. Justice. Action. For All Women and Girls” என்பதாகும். இந்த நாளில் பல தடைகளை தாண்டி சாதனை படைத்த இந்திய பெண்களை நாம் நினைவுகூர்கிறோம்.
முக்கிய இந்திய பெண்களின் சாதனைகள்:
பச்சேந்த்ரி பால்: 1984 மே 23ஆம் தேதி எவரெஸ்ட் மலையை ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர். பனிச்சரிவு தாக்கியபோதும் உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் சிகரத்தை அடைந்தார். 2019ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா: ஹரியானாவின் கர்னாலில் பிறந்த இவர் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண். 1994ஆம் ஆண்டு நாசாவில் தேர்வு செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தார்.
டெஸ்சி தாமஸ்: “இந்தியாவின் ஏவுகணை பெண்மணி” என அழைக்கப்படும் இவர், அக்னி-IV மற்றும் அக்னி-V ஏவுகணை திட்டங்களை வழிநடத்திய முதல் பெண் விஞ்ஞானி.
கிரண் பேடி: 1972ஆம் ஆண்டு இந்திய போலீஸ் சேவையில் (IPS) சேர்ந்த முதல் இந்தியப் பெண். திகார் சிறை சீர்திருத்த பணிகளுக்காக 1994ஆம் ஆண்டு ராமன் மக்சசே விருது பெற்றார்.
கிரண் மஜும்தார்-ஷா: 1978ஆம் ஆண்டு பெங்களூருவில் Biocon நிறுவனத்தை தொடங்கி இந்தியாவின் முக்கிய உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்தார்.
ஆனந்தி கோபால் ஜோஷி: 1886ஆம் ஆண்டு பென்சில்வேனியாவின் Women’s Medical College-ல் மருத்துவ பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.
குரூப் கேப்டன் ஷலிசா தாமி: 2023ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முன்ணணி போராட்ட பிரிவை கட்டுப்படுத்தும் முதல் பெண் அதிகாரி.
மேரி கோம்: ஆறு முறை உலக குத்துச்சண்டை சாம்பியன். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
சுஷ்மிதா சென்: 1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. 1927ஆம் ஆண்டு மதராஸ் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினராக இருந்தார். பெண்கள் கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் தேவதாசி முறையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சென்னை அடையாரில் உள்ள Cancer Institute அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவர்.
Follow Us