பெங்களூரில் மருத்துவமனைகளின் சுற்றுசுவர் இடிந்து விபத்து.. 7 பேர் பரிதாப பலி!
Bengaluru Hospital Wall Collapsed Incident | பெங்களூரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கனமழை காரணமாக சுற்று சுவர் இடிந்து விழுந்த நிலையில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்ககலாம்.
பெங்களூரு, ஏப்ரல் 29 : பெங்களூரில் (Bengaluru) பெய்த கனமழை காரணமாக சிவாஜிநகர் மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 7 பேரி பலியான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஏற்படுத்த பெரும் விபத்து
பெங்களூரில் உள்ளா சிவாஜிநகர் பகுதியில் பவுரிங் மற்றும் கர்சன் ஆகிய மருத்துவமனைகள் உள்ளன. இந்த நிலையில், பெங்களூரில் இன்று கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்கள் சிலர், மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சிலர் இந்த மருத்துவமனைகளின் சுற்றுசுவர் ஓரம் ஒதுங்கியுள்ளனர். அப்போது அந்த மருத்துவமனைகளின் சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவர்களில் மூன்று குழந்தைகள் அடங்குவர்.
இதையும் படிங்க : வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்.. மத்திய சுகாதார துறை வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை
7 பேர் பலியான நிலையில் 7 பேர் காயம்
இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கேரளாவில் வெயிலால் அதிகரித்த பாம்பு தொல்லை.. ஒரே வாரத்தில் 6 பேர் பலி!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், மீட்பு பணிகளை விரைவுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.