AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வெற்றியுடன் முன்னேற நினைத்த மும்பை.. முட்டி கீழே தள்ளிய ஹைதராபாத்

MI vs SRH Highlights: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சாதனை இலக்கான 244 ரன்களை எப்படித் துரத்திப் பிடித்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 129 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து ஹைதராபாத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். அதன்படி, அபிஷேக் 24 பந்துகளில் 45 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் அதிரடியாக 76 ரன்கள் குவித்தார்.

IPL 2026: வெற்றியுடன் முன்னேற நினைத்த மும்பை.. முட்டி கீழே தள்ளிய ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்Image Source: SRH/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Apr 2026 00:07 AM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 29ம் தேதி நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் நான்காவது அதிகபட்ச ரன் சேஸிங்கை நிறைவு செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரலாறு படைத்தது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களை மீறி ரன்களை விட்டுகொடுத்து தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 123 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: ரசிகரின் தலையை காயப்படுத்திய சிக்ஸர்.. PBKS vs RR போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஐபிஎல்-இல் 4வது அதிகபட்ச ரன் சேஸ்:

244 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இது ஐபிஎல் வரலாற்றில் நான்காவது அதிகபட்ச ரன் சேஸிங் மற்றும் ஹைதராபாத் அணியால் விரட்டிப் பிடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் சேஸிங் ஆகும். வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ரியான் ரிக்கில்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க 123 ரன்களின் உதவியால் 243 ரன்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ஹைதராபாத் அணி, இந்த பிரம்மாண்டமான இலக்கை எட்டு பந்துகள் மீதமிருக்க எட்டியது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங்:

  • 265 ரன்கள் – பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • 262 ரன்கள் – பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 246 ரன்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
  • 244 ரன்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்

எஸ்.ஆர்.ஹெச் எப்படி சரித்திரம் படைத்தது..?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சாதனை இலக்கான 244 ரன்களை எப்படித் துரத்திப் பிடித்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 129 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து ஹைதராபாத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். அதன்படி, அபிஷேக் 24 பந்துகளில் 45 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் அதிரடியாக 76 ரன்கள் குவித்தார்.

ALSO READ: ரோஹித் ஷர்மா இன்று ஏன் விளையாடவில்லை? ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ஷாக் தகவல்!

ஆறு பந்துகளுக்குள், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டு வரும் என்று தோன்றிய வேளையில், ஹென்ரிச் கிளாசன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடையேயான 80 ரன் பார்ட்னர்ஷிப், மும்பை இந்தியன்ஸின் வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்தது. கடைசி நேரத்தில் கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சலில் அரோராவும் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். இது மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Follow Us