IPL 2026: ரோஹித் ஷர்மா இன்று ஏன் விளையாடவில்லை? ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ஷாக் தகவல்!
Rohit Sharma: ரோஹித் ஷர்மாவின் இல்லாதது மும்பை அணிக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மும்பை அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மும்பை அணி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தொடங்கியுள்ளன.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) இன்னும் களத்திற்கு திரும்பவில்லை. ஐபிஎல் 2026 தொடரில், ரோஹித் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் 4வது தொடர்ச்சியான போட்டி இதுவாகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான டாஸின்போது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த சமீபத்திய தகவலின்படி, ”ரோஹித் சர்மா ஒன்று முதல் 2 போட்டிகளில் விளையாடாமல் போகலாம் என்று தெரிவித்தார். ரோஹித் சர்மா கடைசியாக கடந்த 2026 ஏப்ரல் 12ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடினார். அன்றைய போட்டியில் பேட்டிங் செய்தபோது அவருக்குத் தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
ALSO READ: சிஎஸ்கே போட்டியை காண ஃப்ரீ.. சென்னை மெட்ரோவில் சூப்பர் பயண திட்டம்!
ரோஹித் ஷர்மா எப்போது திரும்புவார்?
மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று இந்தப் போட்டியில் பேட்டிங்கைத் தீர்மானித்தது. டாஸின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, “ரோஹித் சர்மா முழுமையாகக் குணமடைய நேரம் ஆகலாம். அடுத்த 1-2 போட்டிகளைத் தவறவிடக்கூடும். ரோஹித் சர்மா மீண்டும் களத்திற்குத் திரும்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இன்னும் முழு உடற்தகுதியுடன் இல்லை” என்றார்.




ரோஹித் ஷர்மாவின் இல்லாதது மும்பை அணிக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மும்பை அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மும்பை அணி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தொடங்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ரோஹித் ஷர்மாவைப் போன்ற ஒரு அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் மும்பை அணிக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில், காயம் காரணமாக மிட்செல் சான்ட்னர் இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கேசவ் மஹராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில் ஜாக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். லீக் சுற்றின் பாதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வில் ஜாக்ஸை தங்களது ஆடும் லெவனில் சேர்த்துள்ளது.
ALSO READ: மீண்டும் ரோஹித் இல்லாத போட்டி.. மும்பை அணியின் பிளேயிங் லெவன் இதுதான்..!
மும்பை இந்தியன்ஸ் ஆடும் XI:
ரியான் ரிகல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராபின் மிங்ஸ், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா , ஏ.எம். கசன்ஃபர், அஷ்வினி குமார்