AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பஞ்சாபின் முதல் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் மாற்றங்களா..? யார் முதலிடம்?

IPL 2026 Points Table: பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து, 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

IPL 2026: பஞ்சாபின் முதல் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் மாற்றங்களா..? யார் முதலிடம்?
ராஜஸ்தான் - பஞ்சாப்Image Source: RR and PBKS/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Apr 2026 15:24 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) 2026 ஏப்ரல் 29ம் தேதியான நேற்று நடந்த 40வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்த சீசனின் முதல் தோல்வியை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான் பஞ்சாப் கிங்ஸ் அணி சந்தித்தது. 222 ரன்களையும் பஞ்சாப் அணி குவித்தும், ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலக்கை துரத்தியது. இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 43 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை அளித்தார். பின்னர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்து வைத்த டோனோவன் ஃபெரேரா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இருப்பினும், இந்தத் தோல்விக்குப் பிறகும், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ALSO READ: ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் மும்பை.. தோற்றால் பிளே ஆஃப்பில் வெளியேறுமா..?

பஞ்சாப் அணி தொடர்ந்து முதலிடம்:

பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து, 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் (3வது) முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று 3ல் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சம எண்ணிக்கையிலான புள்ளிகளை (12) பெற்றுள்ளன. ஆனால் ராஜஸ்தானை விட (+0.617) பெங்களூரு சிறந்த நிகர ரன் ரேட்டை (+1.919) கொண்டுள்ளது.

மீதமுள்ள அணிகளின் நிலை:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தாங்கள் ஆடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 5வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தாங்கள் ஆடிய 8 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, 4 தோல்விகளுடன் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 7வது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. சி.எஸ்.கே-வின் நிகர ரன் ரேட் (-0.121), டி.சி-யின் (-1.060) விகிதத்தை விட சிறப்பாக உள்ளது.

ALSO READ: ஓய்வறையில் இ-சிகரெட் புகைத்த ரியான் பராக்?.. கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தாங்கள் ஆடிய 8 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், அதன் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றது. கேகேஆர் அணி 5 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (-0.736) மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் (-1.106) அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் முறையே 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

Follow Us