AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தோனி களமிறங்குவது எப்போது..? சிஎஸ்கேவுக்கு சாதகமா? அஸ்வின் விளக்கம்!

MS Dhoni Play: சிஎஸ்கே (CSK) அணி ஐபிஎல் 2026 சீசனின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டால் மட்டுமே தோனி அணிக்காக விளையாடுவார் என்றும், தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அப்படியே இருப்பதால், சிஎஸ்கே தோனியை சேர்ப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்று முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் சூசகமாக தெரிவித்துள்ளார்.

IPL 2026: தோனி களமிறங்குவது எப்போது..? சிஎஸ்கேவுக்கு சாதகமா? அஸ்வின் விளக்கம்!
எம்.எஸ்.தோனிImage Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Apr 2026 17:34 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) எம்.எஸ்.தோனி எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து இன்னும் சில சஸ்பென்ஸ் நிலவுகிறது. இதற்கிடையில், சிஎஸ்கே (CSK) அணி ஐபிஎல் 2026 சீசனின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டால் மட்டுமே தோனி அணிக்காக விளையாடுவார் என்றும், தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அப்படியே இருப்பதால், சிஎஸ்கே தோனியை சேர்ப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்று முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் சூசகமாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும் 5ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

ALSO READ: சிஎஸ்கேவுக்கு அழைப்பு.. 21 வயது இளம் வீரருக்கு வாய்ப்பா..?

அஸ்வின் கூறியது என்ன..?


இதுதொடர்பாக ரவிசந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில், “சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் தொடரில் இருக்கும்போது, தோனி ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அது சற்று கடினம். சிஎஸ்கே தங்களது கடைசி 5 போட்டிகளில் விளையாடிய விதம் அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு வலுவாக உள்ளது. அதேநேரத்தில், பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தால், சென்னை அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்ய முடியும்.” என்றார்.

ALSO READ: மழை எச்சரிக்கை.. தடை பயத்தில் ராஜஸ்தான்.. தகர்க்குமா பஞ்சாப்?

ஸ்டீபன் ஃபிளெமிங் விளக்கம்:

தோனியின் காயம் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறுகையில், “பயிற்சி போட்டியின்போது தோனிக்கு கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட்டுடன் தோனி தேவையான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தோனியின் கெண்டைக்கால் காயம் சற்று கடினமானது. தோனி மீண்டும் ஓட தொடங்கி, காயம் மீண்டும் ஏற்பட்டால், ஐபிஎல் 2026 சீசனில் இருந்து வெளியேற நேரிடலாம். நாங்கள் தொடக்கத்தில் சற்று அவசரப்பட்டுவிட்டோம். எனக்கு தெரிந்தவரை, பயிற்சி போட்டியின்போது அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. தனது கெண்டைத்தசையில் இயக்கத்தை மீண்டும் பெறுவதற்காக போராடி வருகிறார். ஆனால், அவருக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால், நாங்கள் நினைத்ததை விட அதிக காலம் பிடித்தது. தோனி களத்திற்கு திரும்புவதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்து வருகிறார் என்று மட்டுமே என்னால் கூற முடியும்” என்றார்.

Follow Us