AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மழை எச்சரிக்கை.. தடை பயத்தில் ராஜஸ்தான்.. தகர்க்குமா பஞ்சாப்?

PBKS vs RR Weather Update: ஐபிஎல் 2026 தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பஞ்சாப் தான். பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

IPL 2026: மழை எச்சரிக்கை.. தடை பயத்தில் ராஜஸ்தான்.. தகர்க்குமா பஞ்சாப்?
பஞ்சாப் Vs ராஜஸ்தான்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Apr 2026 15:43 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 19-வது சீசனின் 40-வது போட்டி இன்று அதாவது 2026 ஏப்ரல் 28ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இந்த போட்டியானது முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் பிசிஏ ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டியின்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டில் வானிலை முன்னறிவிப்பு எப்படி..? பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களில் யாருக்கு சாதகமாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கேவுக்கு அழைப்பு.. 21 வயது இளம் வீரருக்கு வாய்ப்பா..?

ஐபிஎல் 2026 தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பஞ்சாப் தான். பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. புது சண்டிகரில் மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால், இன்றும் மழை ஒரு முக்கியப் பங்கு வகிக்கலாம். நாள் முழுவதும் மேகமூட்டமான சூழல் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னரோ அல்லது போட்டியின்போதோ மழை பெய்தால், அது பிட்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும்.

போட்டியில் வானிலை எப்படி இருக்கும்?

முல்லன்பூரில் இன்று மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று அதாவது 2026 ஏப்ரல் 28ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். டாஸ் இரவு 7 மணிக்கு நடைபெறும். முல்லன்பூரில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய 10 சதவீத வாய்ப்பு உள்ளது. ஆனால், இரவு 8 மணி முதல் 9 மணி வரை 20 சதவீத வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்யும் என கணிக்கப்படவில்லை என்றாலும், மழையின் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரத்து செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை.

முல்லன்பூரில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லன்பூரில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 212 ஆகும். இது இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு எவ்வளவு சாதகமானது என்பதை உங்களுக்கு உணர்த்தும். பிட்ச் மற்றும் வானிலையைக் கருத்தில் கொண்டு, இரு அணிகளும் முதலில் பந்துவீசவே வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2026-ல் இங்கு நடைபெற்ற முந்தைய இரண்டு போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே முதலில் பந்துவீசும் முடிவு எளிதானதாக இருக்காது.

ALSO READ:

முல்லன்பூர் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும், ஏனெனில் பந்து பேட்டில் நன்றாக வரும். எனவே, இன்றைய போட்டியிலும் அதிக ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Follow Us