AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ரசிகரின் தலையை காயப்படுத்திய சிக்ஸர்.. PBKS vs RR போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Priyansh Arya Six Injured Fan: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இதுவே முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் உதவியுடன் 22 பந்துகளில் 62* ரன்கள் எடுத்தார்.

IPL 2026: ரசிகரின் தலையை காயப்படுத்திய சிக்ஸர்.. PBKS vs RR போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ரசிகரின் தலையில் காயம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Apr 2026 17:44 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 28ம் தேதி முல்லன்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரியான் பராக் (Riyan Parag) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. போட்டியின் போது, ​​பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அடித்த சிக்ஸர், பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த ஒரு ரசிகரை கடுமையாக தாக்கியது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியானது.

ALSO READ: பஞ்சாபின் முதல் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் மாற்றங்களா..? யார் முதலிடம்?

பந்து தாக்கி காயம்:

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இந்த சிக்ஸர் மழையின் போது, ​​ஒரு பந்து நேராக கேலரிக்குள் சென்று, அங்கு போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகரின் கண்ணுக்கு மிக அருகில் பட்டது. இதனால், அவரது கண்ணிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. சட்டை முழுவதும் இரத்தத்தில் நனைந்திருந்த அந்த ரசிகருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அந்த ஷாட்டை அடித்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், காயமடைந்த நபருக்கு அருகில் ஒருவர் சிரித்துக் கொண்டிருப்பது இணையவாசிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றிய பிரியான்ஷ் ஆர்யா:

பஞ்சாபின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா ராஜஸ்தானுக்கு எதிராக 11 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 29 ரன்கள் எடுத்தார். அவர் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றபோதிலும், தனது இன்னிங்ஸை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் தோல்வி:

ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இதுவே முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் உதவியுடன் 22 பந்துகளில் 62* ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். அதேநேரத்தில், பிரப்சிம்ரன் சிங்கும் 59 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து புகை.. ரியான் பராக்கிற்கு சிறைத்தண்டனை?

இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. தேவன்வான் ஃபெரேரா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்தபோதிலும், இருவரின் இன்னிங்ஸ்களாலும் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. இதன்மூலம், பஞ்சாப் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும், இந்தத் தோல்விக்குப் பிறகும், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Follow Us