AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: விளையாட சூழலற்ற நிலையில் சுதர்சன்.. இந்த 3 வீரர்களில் யாருக்கு வாய்ப்பு?

Sai Sudarshan Replacement: காயம் காரணமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் விலக்கப்பட்டுள்ளார். சுதர்சன் தனது வலது காலில் ஏற்பட்ட அழுத்த முறிவு காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Team India: விளையாட சூழலற்ற நிலையில் சுதர்சன்.. இந்த 3 வீரர்களில் யாருக்கு வாய்ப்பு?
சர்பராஸ் கான் - ருதுராஜ் கெய்க்வாட் - ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Aug 2026 17:15 PM IST

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) மேலும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் விலக்கப்பட்டுள்ளார். சுதர்சன் தனது வலது காலில் ஏற்பட்ட அழுத்த முறிவு காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல்களின்படி, சுதர்சன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வலைப்பயிற்சி செய்ததுடன், மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியும் உள்ளார். இருப்பினும், அவரது கட்டைவிரலில் இன்னும் வலி உள்ளது. இதையடுத்து, காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சாய் சுதர்சனுக்கு (Sai Sudharsan) பதிலாக யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காயத்தால் சிகிச்சையில் 13 இந்திய வீரர்கள்.. குழப்பத்தில் திணறும் கில் – காம்பீர்!

சர்பராஸ் கான்

28 வயதான சர்பராஸ் கான், சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.  வலது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ், 2024-ல் இந்தியாவுக்காக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இருப்பினும், நவம்பர் 2024-க்குப் பிறகு அவருக்கு வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக அதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுக்காக சர்பராஸ் கான் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில், 11 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் உட்பட 371 ரன்கள் எடுத்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்

சுதர்ஷனுக்குப் பதிலாக வலது கை பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ருதுராஜ் இந்தியாவுக்காக ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும் 23 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார், இருப்பினும் அவர் இன்னும் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. ஆனாலும், உள்நாட்டுப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்துள்ளன. கெய்க்வாட் 47 முதல் தரப் போட்டிகளில் 44.51 சராசரியில் 3,294 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 9 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். சுழற்பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறன் அவருக்கு ஒரு சாதகமான அம்சமாகும். இலங்கையின் ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும்.

ALSO READ: பாடாய்ப்படுத்தும் காயம்.. விலகிய சாய் சுதர்சன்.. இலங்கை தொடரில் இடம்பெறும் பேட்ஸ்மேன் யார்?

ஷ்ரேயாஸ் ஐயர்

தேர்வாளர்கள் 31 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் மீது சில காலமாகவே மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஷ்ரேயாஸ் டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டு, உடனடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் இந்தியாவுக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 24 இன்னிங்ஸ்களில் 811 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 36.86 ஆகும். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பிப்ரவரி 2024-ல் விளையாடினார். அவர் டெஸ்ட் அணிக்குத் திரும்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும், அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் ஓவர் கிரிக்கெட்டில் சுழற்பந்துக்கு எதிராக ஐயர் ஒரு வலிமையான பேட்ஸ்மேனாகக் கருதப்படுகிறார். தேர்வாளர்கள் அவரை மீண்டும் டெஸ்ட் அணிக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

Follow Us