IND vs SL: மீண்டும் காயத்தில் சிக்கிய கில்.. இலங்கை தொடருக்கு தலைமை வகிப்பாரா?
Shubman Gill Injury: கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சுப்மன் கில் இல்லாத நிலையில், கே.எல். ராகுல் அணியை வழிநடத்த, இந்திய அணி பந்துவீச்சுடன் களமிறங்கியுள்ளது.
வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) கொழும்பிலிருந்து ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள என்.சி.சி ஸ்டேடியத்தில் இலங்கை கிரிக்கெட் ஆடும் லெவனுக்கு எதிராகத் தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பதிலாக துணை கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் போடக் களமிறங்கி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸின் போது கே.எல். ராகுல் வெளியேறியதைத் தொடர்ந்து, சுப்மன் கில்லின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளது.
ALSO READ: உடல் எடையால் சிக்கல்.. ஹர்ஷித் ராணாவால் கொந்தளிக்கும் பிசிசிஐ!




சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது..?
Update: Captain Shubman Gill sustained an impact injury to his right ring finger during India’s practice on Thursday. As a precautionary measure, he will not take the field on Day 1 of the warm-up game against SLC XI. The BCCI Medical Team is monitoring his progress.
KL Rahul… https://t.co/Mzu2yW4OgX
— BCCI (@BCCI) August 7, 2026
பிசிசிஐ பகிர்ந்த தகவலின்படி, கேப்டன் சுப்மன் கில் நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த பயிற்சியின்போது தனது விரலில் காயம் அடைந்தார். இதனால், இந்த 3 நாள் பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் சுப்மன் கில் களமிறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். கில் காயம் மற்றும் குணமடைதலை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
ALSO READ: ஆசிய கோப்பை 2026 : இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான வாய்ப்பு குறைவா? என்ன காரணம்?
இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை
கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சுப்மன் கில் இல்லாத நிலையில், கே.எல். ராகுல் அணியை வழிநடத்த, இந்திய அணி பந்துவீச்சுடன் களமிறங்கியுள்ளது. சுப்மன் கில் இந்த காயத்திலிருந்து விரைவில் குணமடைவார் என்றும், அவரது காயம் மிகவும் தீவிரமானதல்ல என்றும் இந்திய அணி நிர்வாகமும் ரசிகர்களும் நம்புகின்றனர். இருப்பினும், 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சுப்மன் கில் முழு உடற்தகுதியுடன் இருப்பார். பயிற்சி அமர்வுக்கான ஆடும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்திய அணி பேட்டிங் செய்யும்போது கில் களமிறங்கலாமா என்பது குறித்த முடிவு அணி நிர்வாகத்தின் கைகளில் இருக்கும்.