AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு ரூபாய் பாட்டிக்கு மீண்டும் வழங்கப்பட்ட இலவச சிலிண்டர் – மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நடவடிக்கை

Coimbatore’s Rs 1 Idli Grandmother : கோவை மாவட்டத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் வழங்கப்பட உள்ளது.

ஒரு ரூபாய் பாட்டிக்கு மீண்டும் வழங்கப்பட்ட இலவச சிலிண்டர் – மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நடவடிக்கை
கமலாத்தாள் பாட்டி
Sekaran S
Sekaran S | Updated On: 22 Sep 2026 11:06 AM IST

கோவை, செப்டம்பர் 22 : கோவை மாவட்டத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் மீண்டும் வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கமலாத்தாள் பாட்டி தனக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார் மனு அளித்திருந்தார்.

ஒரு ரூபாய் பாட்டிக்கு மீண்டும் வழங்கப்பட்ட இலவச சிலிண்டர்

இதனால் தனது அன்றாட சமையல் பணிகளுக்கும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் அறிவுறுத்தலின்படி, கமலாத்தாள் பாட்டிக்கு மீண்டும் கட்டணமில்லா சமையல் எரிவாயு உருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சாக்கடையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்.. சேலத்தில் பரபரப்பு!

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள தகவலில், நாளை முதல் கமலாத்தாள் பாட்டிக்கு தடையின்றி கட்டணமில்லா சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, ஏழை மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறார். அவரது கோரிக்கையை தொடர்ந்து அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மீண்டும் இலவச எரிவாயு சிலிண்டர் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

கோயம்புத்தூர் மாவட்டம், வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ என்று அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். கமலாத்தாள் பாட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். தொடக்கத்தில் 25 பைசா, 50 பைசா என இட்லி விற்று வந்தவர், கடந்த 10-15 ஆண்டுகளாகவே ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறார்.

கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஏழை மக்கள் காலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காகவே மிகக் குறைந்த விலைக்கு இட்லி, சாம்பார் மற்றும் சட்னி வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் மின்சார கிரைண்டர் அல்லது கேஸ் அடுப்பு எதுவுமின்றி, ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து, விறகு அடுப்பிலேயே தினமும் நூற்றுக்கணக்கான இட்லிகளைத் தயாரித்து வந்தார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – கனமழைக்கு வாய்ப்பு?

அதிகாலை 3 மணி முதலே தனது அன்றாட வேலைகளைத் தொடங்கி, அனைத்தையும் தனியாளாகவே செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரது பாராட்டி, அவருக்கு கேஸ் அடுப்பு போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தார். மேலும் வடிவேலம்பாளையத்தில் நிசமையலறையுடன் கூடிய புதிய வீட்டைக் கட்டி கடந்த 2022 அன்னையர் தினத்தன்று அவருக்கு மகிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

அதேபோல, மத்திய அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மூலமாக இவருக்கு இலவச சமைலயல் காஸ் இணைப்புகளும் வழங்கப்பட்டன.​ கொரோனா காலத்தில்​ ஊரடங்கு மற்றும் தற்போது விலைவாசி உயர்வு உச்சத்தில் இருந்தபோதிலும், இட்லி விலையை அவர் உயர்த்தவே இல்லை என்பதுதான் கூடுதல் சிறப்பம்சம்.

Follow Us