AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனைவியுடன் கள்ளத்தொடர்பு? முறிந்தது 40 ஆண்டு கால நட்பு.. கோவையில் மிளகாய் பொடி தூவி நண்பரை கொன்ற நபர்!

Coimbatore Murdered : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த நபர் தனது 40 ஆண்டு கால நண்பரை கொடூரமான முறையில் கத்தியால் வெட்டி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு? முறிந்தது 40 ஆண்டு கால நட்பு.. கோவையில் மிளகாய் பொடி தூவி நண்பரை கொன்ற நபர்!
கோவை கொலை சம்பவம்.
Sekaran S
Sekaran S | Published: 28 Aug 2026 21:46 PM IST

கோயம்புத்தூர் மாட்டம், நரசீபுரம் பகுதி வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (62 வயது). பாக்கு மட்டை வியாபாரம் செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (65 வயது) மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். ​இந்த நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வரும் நாகராஜுக்கும், கந்தசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதில், நாகராஜ் மீது கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரை கந்தசாமி கண்டித்ததாக தெரிகிறது. ஆனால், இதனை அவர் கேட்வில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரிடையே கடந்த கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மிளகாய்ப் பொடியை தூவி நண்பர் கொலை

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை நாகராஜ் கடைக்கு சென்று டீ வாங்கி கொண்டு தனது பைக்கில் நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டுருந்த கந்தசாமி, அவரை வழி மறித்து தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை நாகராஜின் கண்ணில் தூவினார். இதில், ​கண் எாிச்சலால் அலறிய நாகராஜை, கத்தியால் கழுத்து, தலை மற்றும் வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

மேலும் படிக்க: திமுக அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல்.. அலறி துடித்த விசிக நிர்வாகி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!

தன்னைத்தானே கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி

இந்த கொலை வெறி தாக்குதலில் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீஸார் நாகராஜின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் அடிப்படையில், ​கொலையாளியான கந்தசாமியை பிடிக்க போலீஸார் முயன்ற போது, அவர் தனது வலது கையில் கத்தியால் வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு

உடனே அவரை மீட்ட போலீஸார் அவரை கைது செய்து, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஆலந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 40 ஆண்டு கால நண்பரை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!

Follow Us