AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs SL: வெயிலில் வெகுநேரம் நின்ற தேவ்தத் படிக்கல்.. இலவசமாக பச்சை குத்திய சூரிய பகவான்!

Devdutt Padikkal Viral Photo: படிக்கல் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் 3 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் உட்பட 328 ரன்கள் எடுத்தார். அதன்படி, படிக்கல் 167, 44, மற்றும் 117 ரன்களை அடித்தார். இதனால், இவருக்கு தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படிக்கல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன், 69.66 சராசரியில் 418 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs SL: வெயிலில் வெகுநேரம் நின்ற தேவ்தத் படிக்கல்.. இலவசமாக பச்சை குத்திய சூரிய பகவான்!
தேவ்தத் படிக்கல்Image Source: Devdutt Padikkal/Instragram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2026 20:16 PM IST

கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்தியா, இலங்கைக்கு எதிரான (IND vs SL) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய டெஸ்ட் அணியில் 3வது வரிசையில் களமிறங்கும் தேவ்தத் படிக்கல், தனது பெயரையும் ஜெர்சி எண்ணையும் தனது ஜெர்சியின் முதுகில் பச்சை குத்தாமல் வெயிலால் அச்சிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொழும்பு டெஸ்டில் ஃபாலோ-ஆன் செய்ய நிர்பந்திக்கப்பட்ட பிறகு, இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்தது. இதன் விளைவாக, இந்திய அணியின் (Indian Cricket Team) வீரர்கள் தொடர்ந்து 243.4 ஓவர்கள் களத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்னதாக, படிக்கல் முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்கள் பேட் செய்தார். படிக்கல் 11வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்து, 138வது ஓவரில் இந்தியா டிக்ளேர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ALSO READ: சமனில் முடிந்த 2வது டெஸ்ட்.. 5வது இடத்தில் முடங்கிய இந்தியா.. WTC 27 பைனலுக்கு செல்லுமா?

படிக்கல் புகைப்படம் இணையத்தில் வைரல்:

 

View this post on Instagram

 

A post shared by Devdutt Padikkal (@devpadikkal19)


தேவ்தத் படிக்கல் வெயிலால் தனக்கு நேர்ந்த சம்பவத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்தப் பதிவில், அந்தத் தொடரிலிருந்து மேலும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்னும் சிறப்பாகச் செயல்பட நான் ஆர்வமாக உள்ளேன். இந்தத் தொடரிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று எழுதியிருந்தார். அதன் பின்னர் படிக்கல், “சூரியன் எனக்கு ஒரு பச்சை குத்தியுள்ளது,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை தொடரில் 2 சதங்கள்:

படிக்கல் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் 3 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் உட்பட 328 ரன்கள் எடுத்தார். அதன்படி, படிக்கல் 167, 44, மற்றும் 117 ரன்களை அடித்தார். இதனால், இவருக்கு தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படிக்கல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன், 69.66 சராசரியில் 418 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: ஒரே டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் – புதிய உலக சாதனை படைத்த தினுஷா

கொழும்பு டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் தனது வலது தோள்பட்டையில் காயமடைந்தார். அவர் அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அதை ஒரு நினைவுச் சின்னம் என்று குறிப்பிட்டார். இந்தக் காயம் காரணமாக பண்ட் பல மணி நேரம் பெஞ்சில் இருக்கவில்லை. அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். ரிஷப் பண்ட் 3 இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்கள் உட்பட, 56 சராசரியில் 168 ரன்கள் எடுத்தார்.

Follow Us