Ind vs SL : இலங்கையின் போராட்டத்தால் டிராவில் முடிந்த போட்டி – தொடரை கைப்பற்றிய இந்தியா
இலங்கையின் போராட்டத்தால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இலங்கை அணியின் சோனல் தினுஷா மற்றும் பசிந்து சூரியபண்டாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக போட்டி டிராவில் முடிந்தது. தினுஷா 133 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இலங்கையின் போராட்டத்தால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்தியா ஃபாலோ ஆன் முறையை அமல்படுத்திய போதும் இலங்கை அணியின் சோனல் தினுஷா மற்றும் பசிந்து சூரியபண்டாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக போட்டி டிராவில் முடிந்தது. தினுஷா 133 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொழும்பு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கையின் போராட்டத்தால் டிராவில் முடிந்த போட்டி
கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஃபாலோ ஆன் முறையில் களமிறங்கிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி நாளில் அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்தியா, 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026.. இந்தியா – பாகிஸ்தான் நேரடி மோதல்.. தேதி வாரியாக முழு விவரம்!




கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எட்டிய நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 117 ரன்களும் துருவ் ஜூரல் 115 ரன்களும் எடுத்திருந்தனர். இவர்களுடன் ரிஷப் பண்ட் 63 ரன்களும், கேப்டன் கில் 50 ரன்களும் அடித்தனர்.
503 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இலங்கை அணியில் சோனல் தினுஷா 103 ரன்களும், பாசிந்து சூரியபண்டாரா 80 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்குள் சுருண்டது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஃபாலோ ஆன் முறையில் இலங்கையை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இதையும் படிக்க : IND vs SL: இந்திய அணியின் வெற்றி நிச்சயம்? ஃபாலோ-ஆனுக்குப் பிறகு இலங்கையின் சாதனை இதுதான்!
2வது இன்னிங்கிஸில் இலங்கை அணி களமிறங்கிய போது இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமாக இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இலங்கை அணி வீரர்கள் அபாரமாக ஆடி அணியை மீட்டெடுத்தனர். குறிப்பாக இலங்கை அணியின் சோனல் தினுஷா 264 பந்துகளில் 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன்பாசிந்து சூர்ய பண்டாரா 92 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 55 ரன்களும் குவித்தனர். இதனால் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.