AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Toxic: கேஜிஎஃப் 2 பட முதல் நாள் வசூலை முந்தியதா யாஷின் டாக்ஸிக்? விவரங்கள் இதோ!

Toxic Movie 1st Day Collection: கன்னட சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்து, தற்போது பான் இந்திய சினிமாவே கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில், நேற்று (26/08/2026) வெளியான படம் டாக்ஸிக். இப்படம் முதல் நாள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Toxic: கேஜிஎஃப் 2 பட முதல் நாள் வசூலை முந்தியதா யாஷின் டாக்ஸிக்? விவரங்கள் இதோ!
டாக்ஸிக்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Aug 2026 17:52 PM IST

பான் இந்திய சினிமாவே கொண்டாடும் பிரபல நடிகராக இருந்துவருபவர் ராக்கிங் ஸ்டார் யாஷ் (Rocking Star Yash). இவர் கன்னட சினிமாவின் மூலம் நாயகனாக அறிமுகமான நிலையில், தற்போது பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1 (KGF 1 & KGF 2) மற்றும் 2 போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்ற இவர் நடித்துள்ள புது படம்தான் டாக்ஸிக்: எ ஃபெரி டைல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Crown Ups). இந்த படத்தில் மலையாள நடிகையும், பெண் இயக்குநருமான கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, யாஷும் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். இந்த டாக்ஸிக் திரைப்படமானது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இன்றிய மொழிகளில், நேற்று (26/08/2026) உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

முதல் நாளிலே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில், இப்படம் முதல் நாள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு:

நடிகர் யாஷ் இந்த படத்தில், அப்பா மற்றும் மகன் என ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் நடிகைகள் கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இனைந்து நடித்திருந்தனர்.

இப்படமானது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ஒரு காதல் மற்றும் எமோஷனல் சார்ந்த கதையில் உருவாகியுள்ளது. இப்படம் முதல் நாள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 படத்தின் முதல் நாள் வசூலை முந்தியதா டாக்ஸிக் :

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த படம்தான் கேஜிஎஃப் 2. கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது. இப்படமானது கேஜிஎஃப் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் வெளியான நிலையில், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இப்படமானது முதல் நாளில் சுமார் ரூ 164 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

இதையும் படிங்க: டாக்ஸிக் பட இயக்குநருடன் நயன்தாரா நடித்திருக்கிறாரா? அட இந்த படமா?

ஆனால் டாக்ஸிக் படமானது முதல் நாளில் சுமார் ரூ 150 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்தை ஒப்பிடும்போது டாக்ஸிக் படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 14 கோடி குறைவாக வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கேஜிஎப் 2 படத்திற்கு யு/ஏ தரச் சென்சார் கிடைத்தது, ஆனால் டாக்ஸிக் படத்திற்கு ஏ தரச் சென்சார் கிடைத்தது. இதனாலே முதல் நாள் வசூல் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow Us