AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

The Paradise 2nd Single: தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தி நேச்சுரல் ஸ்டார் நானி. இவரின் நடிப்பில், அதிரடி கேங்ஸ்டர்ஸ் படமாக உருவாகியுள்ளது தி பாரடைஸ். அனிருத் இசையமைக்கும் நிலையில், 2வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
நானியின் தி பாரடைஸ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Aug 2026 17:14 PM IST

டோலிவுட் சினிமாவில் முன்னனணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வரிசையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹிட் 3 (HIT 3). கடந்த 2025ம் ஆண்டு மே மாத்தியில் இப்படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் உருவாகிவரும் திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் தி பாரடைஸ் படத்திலிருந்து ஏற்கனவே, “ஆயா ஷேர்” என்ற பாடலானது வெளியாகியிருந்தது. இந்த பாடல் தற்போதுவரை ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடல் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூரியின் பர்த்டே.. மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

தி பாரடைஸ் படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?:

நடிகர் நானி இந்த திரைப்படத்தின் அதிரடி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவடையாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடல் ஒன்றிலும் நடனமாடியிருக்கிறார். இந்நிலையில், தற்போது தி பாரடைஸ் படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்? வைரலாகும் தகவல்

இப்பாடலானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில், அனிருத்தின் மியூசிக் கான்செட்டில் வெளியாகிறதாம். டெக்சாஸில் உள்ள டல்லாஸ் என்ற இடத்தில் நடக்கும் அனிருத்தின் மியூசிக் கான்செட்டில், தி பாரடைஸ் பட 2வது பாடல் வெளியாகிறதாம். இதற்காக நடிகர் நானியும் டெக்சாஸுக்கு செல்கிறாராம். இதையடுத்து டிஜிட்டலாக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நானியின் தி பாரடைஸ் பட 2வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

நானியின் இந்த திரைப்படமானது அதிரடி மற்றும் ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ளது. இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறதாம். இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Follow Us