சூரியின் பர்த்டே.. மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
Actor Sooris 49th Birthday : தமிழ் சினிமாவில் சின்ன வேடங்களில் நடித்து, தற்போது லீட் நாயகனாக படங்களில் நடித்து வருபவர் சூரி. இவர் இன்று (27/08/2026) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு மண்டாடி படக்குழு வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருபவர் சூரி (Soori). இவர் ஆரம்பகாலங்களில் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தார். மேலும் அதன் பிறகு காமெடியனாகவும், துணை வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். சினிமாவில் ஷூட்டிங்கில் எலக்ட்ரிஷியனாக இருந்த சூரி, தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் பிரஷாந் இயக்கத்தில், மாமன் (Maaman) என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த வரிசையில், சூரியின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi).
இந்த படமானது சிறப்பான கதையில் உருவாகியுள்ள நிலையில், வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இன்று 2026ம் ஆண்டு ஆக்ஸட் 27ம் தேதியில் சூரி தனது 49வது பிறந்தநாளை கொண்டடைவருகிறார். அதை முன்னிட்டு மண்டாடி படக்குழு, சூரியை வாழ்த்தி ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர – 22 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்
சூரியின் பிறந்தநாளை முன்ணனிட்டு மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் பதிவு:
His path and journey is a sensation, inspiring everyone along the way.💥
Wishing, The one and only @sooriofficial, a very Happy Birthday! ❤️
#Mandaadi in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥#Suhas #sathyaraj @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5
@bala_actor… pic.twitter.com/d4ITxYJZTB— RS Infotainment (@rsinfotainment) August 27, 2026
சூரியின் மண்டாடி படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது:
இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில், சூரி முதல் முறையாக நடித்திருக்கும் முழு ஆக்ஷன் படம்தான் மண்டாடி. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் மெயின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் மிகவும் முக்கியமான தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளதாம். சிறப்பான கப்பல் போட்டியின் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: டாக்ஸிக் பட இயக்குநருடன் நயன்தாரா நடித்திருக்கிறாரா? அட இந்த படமா?
இந்த படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இப்படத்துடன் தமிழில் டிமாண்டி காலனி 3 படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில், இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் நடைபெறவுள்ளது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ரவிக்குமார் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்களாம்.