AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர – 22 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்

22 years of Madhurey movie | தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று தான் மதுர. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளைக் கடந்துள்ளதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர – 22 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்
மதுர Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 14:55 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது அரசியலில் சக்கைபோடு போட்டு வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் படங்களின் பட்டியல் என்பது மிகப் பெரியது என்றே சொல்லலாம். அந்த வரிசையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மதுர. இந்தப் படத்தை இயக்குநர் மாதேஷ் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ, வடிவேலு, சீதா, பசுபதி, ஹேமலதா, மாணிக்க விநாயகம், இளவரசு, சண்முகராஜன், யுகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கராத்தே ராஜா, ஏ.வி. ரமணன், பாலா சிங், ராஜ் கபூர், நெல்லை சிவா, போண்டா மணி, விஜய் கணேஷ் மற்றும் ஸ்ரீதர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also Read… நோ அக்டோபர்… இந்த வருசம் செப்டம்பரே… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

22 ஆண்டுகளைக் கடந்தது விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்:

இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் ஒரு மாவட்ட ஆட்சியராக நடித்து இருப்பார். மேலும் இவருக்கு உதவியாளராக இருந்த காஜல் அகர்வால் வில்லன்களால் கொல்லப்படுவார். அவரது இறப்பிற்கு தான் தான் காரணம் என்று நினைக்கும் விஜய் அவரின் மொத்த குடும்பத்தையும் தன்னுடைய குடும்பம் மாதிரி பார்த்துகொள்கிறார். அப்படி அவர் பார்த்துகொள்ளும் போது வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அது தொடர்பாக பதிவுகளும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read… நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Follow Us