Sardar 2: மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது!
Mayil Veera Song: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் சர்தார் 2. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், மயில் வீரா என்ற முதல் பாடல் வெளியானது.
தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவரும் நாயகனாக இருப்பவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 26 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வா வாத்தியார் (vaa vaathiyaar). இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்க, மிக பிரம்மாண்டமாக வெளியானது. கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து கார்த்தியின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகி காத்திருக்கும் 2வது படம்தான் சர்தார் 2 (Sardar 2). இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான மயில் வீரா (Mayil veera) என்ற பாடலானது வெளியாகியுள்ளது. இந்த பாடலானது தமிழ் கடவுள் முருகனின் புகழ் பாடும் பாடலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இது உங்களுக்கான ஒரு விருந்து.. டாக்ஸிக் திரைப்படம் பற்றி பகிர்ந்த யாஷ்!
கார்த்தியின் சர்தார் 2 படத்தின் மயில் வீரா பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
It’s time to get #Murugafied because, Mayil Veeran has arrived ⚡️
Edraa kaavadiya 💥💥
Podraa dance’ah 🦚⚡️#MayilVeera – https://t.co/JkVx0UwQX0First Single OUT NOW 🔊#Sardar2#Sardar2FromSep10@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop…
— Prince Pictures (@Prince_Pictures) August 25, 2026
கார்த்தியின் சர்தார் 2 படத்தின் மைய கரு என்ன:
நடிகர் கார்த்தியின் இந்த சர்தார் 2 படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இதில் நடிகர் யோகி பாபு காமெடி நடிகராக நடித்துள்ளார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சர்தார் 1 படமானது தண்ணீர் மாஃபியா தொடர்பான கதைக்களத்தில் அமைந்த நிலையில், சர்தார் 2 படமானது மெடிக்கல் கிரைம் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் நடிகர் எஸ்ஜே.சூர்யாதான் மெயின் வில்லனாக நடித்துள்ளாராம். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலையில், இந்த் படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



