AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஸ்ரேயா சரண்? வைரலாகும் போட்டோ

Is actress Shriya Saran starring in Dharman movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கிறாரா என்ற கேள்வி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஸ்ரேயா சரண்? வைரலாகும் போட்டோ
ஸ்ரேயா சரண்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2026 12:05 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதிக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இறுதியாக தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஸ்ரேயா சரண் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயா சரணின் நடிப்பு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளதோ அதைவிட அதிகப்படியகா அவரது நடனம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தொடர்ந்து பேட்டிகளை அளித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வெளியிட்ட இண்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஸ்ரேயா சரண்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியான நாள் என்ற குறிப்புடன் ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம், சிவாஜி பட கூட்டணி மீண்டும் தர்மன் படத்திலும் இணைந்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தர்மன் படத்தில் ஸ்ரேயா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு சிறப்பு நடனப் பாடலில் தோன்றுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தர்மன் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரசிகர்கள் கேட்டா அரசியலுக்கு வருவீங்களா? ரவிமோகன் சொன்ன விசயம்

Follow Us