தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் சாய் அபயங்கர்.. அட இந்த படத்திற்கா?
Dhanush And Sai Abhyankkar Combo: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நாயகனாக மிகவும் பிரபலமானவர் தனுஷ். இவரின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்றவற்றில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனுஷின் ஓம் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், மேலும் ஒரு படத்தில் அவர் இணைந்துள்ளாராம். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவில் அதிக படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில், ஓம் (OM) திரைப்படத்தில் இணைந்திருந்தார். இப்படம் ஆரம்பத்தில் டி55 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தனுஷுடன், சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்.
மேலும் இதையடுத்து எந்த இயக்குநருடன் இணைகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது குறித்த அப்டேட்டுகளும் வெளியாகியது. அந்த படத்தில் தனுஷுடன் மீண்டும் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இணைகிறாராம். அது என்ன திரைப்படம் என விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ராம் அண்ட் லீலா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!
தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் சாய் அபயங்கர்:
சாய் அபயங்கர் மற்றும் தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே ஓம் திரைப்படம் உருவாகிவருகிறது. இதை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, அலாகலோவா என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன் – நடிகர் அர்ஜுன் தாஸ்
இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாம். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள டி56 படத்திலும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறாராம். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனுஷ் மற்றும் சாய் அபயங்கர் இணையும் புது படத்தை பற்றி வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Dhanush – Tamizharasan Pachamuthu – #SaiAbhyankkar
Sep last Week Or October 1st Week Shoot Start Plan..
— Movie Tamil (@_MovieTamil) August 22, 2026
தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், தற்போது ஷூட்டிங் திருவண்ணாமலையில் நடைபெற்றுவருகிறது. இந்த ஷூட்டிங்கில் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு நாளுக்கு முன்புதான் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.